அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  துபாய் .துபாயில் நடைபெற்ற நட்சத்திர பாட்மிண்டன் போட்டியில் நடிகர் அருண் விஜய் தலைமையிலான சென்னை ஈகிள்ஸ் சாம்பியன் டிராபியை வென்றனர். காலை 9 மணி தொடங்கி மாலை வரை அல் ஷஹாப் அரபி கிளப் (செஞ்சுரி மால் அருகில்)விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.(Chennai Eagles)சென்னை ஈகிள்ஸ் கேப்டன் நடிகர் அருண் ,( Falcon Fires)பல்கான் பயர்ஸ் அணியின் கேப்டன் நடிகர் ஜெயம் ரவி ,( Naturals peacock )நேட்சுரல் பீக்காக் அணியின் கேப்டனாக நடிகை மீனா , crv pelicans சி ஆர்வி பெலிகன்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் பரத் ஆகியோர் தலைமையில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர் .இதில் நடிகர் அருண் விஜய் தலைமையிலான சென்னை ஈகிள்ஸ் சாம்பியன் டிராபியை வென்றனர்.​துபாயில் முதன் முறையாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற சிபிஎல் நட்சத்திர பேட்மிண்டன் போட்டிகள் யுவர் சங்கர் ராஜாவின் இசைவிழாவும் நடைபெற்றது.துபாய் ஷபீல் பூங்கா (Zabeel Park )பகுதியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான‌ பார்வையாளர்கள் இப்போட்டிகளை நேரில் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சியின் போது நடனமும்,நடிகர் நடிகைகளின் கலந்துரையாடலும் நடைபெற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-