அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
   காய்கறி, பழங்களை காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என வர்ணக்கின்றனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.

மேலும் உப்பு, எண்ணெய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன், காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால் உடல்நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-