அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
(27.02.2016)

பெரம்பலூர் மாவட்டத்தின் பிரமாண்டமாய், விசுவக்குடி நீர்த்தேக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது...


விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளால் விட்டுவிடாமல் ஒவ்வொரு முறை யும் ஓங்கி ஒலித்துக்துக்கொண்டி ருந்த தொடர்முழக்கங்களும்...

நமது மாவட்டத்தின் நாளைய வளச்சிக்கு நம்பிக்கையுடன் வித்திடுவதற்காக நபார்டுவங்கி, நமக்குத் தந்த நிதியுதவியும்...

தாரக மந்திரமாய் நம்மால் உச்சரிக்கப்பட்ட, தரேஷ் அஹமது என்றத் தனிப்பெரும் மனிதனின் தன்னலமற்ற உழைப்பும்...

உருவம்தந்த பொறியாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும், உறங்கி விடாமல் இருப்பதற்கும், உசுப்பி வந்த ஊடகங்களும்...

இவற்றோடு...

பொறுப்பை உணர்ந்து காலம் தாழ்த்தாமல் கடமையை நிறைவேற்றிய பொதுப் பணித் துறைப் பொறியாளர்களுமே இதற்குக் கட்டியங்கூறும் காரணங்கள்...!!


நமதுகாலத்தில் நம் கண்முன்னே கட்டுக்கடங்காத கல்லாற்று வெள் ளத்தை தடுத்து, கழனிகள் செழிப் பதற்காகக் கட்டிமுடிக்கப்பட்ட அணையை நினைத்து ஆனந்தப் படுவோம்...!!!

-ஜே.வில்சன், பெரம்பலூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-