அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


துபாய்: எத்தனையோ நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேவ்வேறு நிறுவனங்களுக்கு பணியை மாற்றியவுடன் பக்கத்து சீட்டில் தன்னுடன் பணியாற்றிய‌வரை கூட மறந்து விடுவார்கள் எவ்வித தொடர்பு இருக்காது ஒரு சிலரே நட்பை தொடர்வர்கள். அதிலும் தனது பழைய உரியமையாளருடன் நல்ல நட்பில் இருப்பவர்கள் அபூர்வம் அவர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த தினாஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் நிறுவனம் ஒன்றில் பல ஆண்டுகள் ஆபிஸ் பாயாக பணியாற்றி அதே நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுரையில் நாடு திரும்பி சொந்தமாக பர்னிச்சர் கடை திறந்து தொழில் செய்தாலும் தனது பழைய வெளிநாட்டு முதலாளியுடன் தொடர்ந்து நட்புடனும் போன் மூலம் நல்லுறைவை தொடர்வதோடு அவரின் ஆலோசனைகளையும் வாழ்த்துக்களை பெற்று முதலாளியாக சொந்த தொழில் செய்கிறார்.

துபாயில் பர்னிச்சர் நிறுவனம் ஒன்றில் ஆபீஸ் பாயாக பணிக்கு சேர்ந்ந்து பல்வேறு அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் சில 9 ஆண்டுகள் பணியாற்றி வந்தார் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தினாஜ்கான் நிறுவனத்தின் உரிமையாளரின் நன்மதிப்பை பெற்ற இவர் நாடு திரும்ப முடிவு செய்து தனது சொந்த தொழில் ஆசையை தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் உரிமையாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஃபர்ஹத்திம் தெரிவித்தார் அதனை கேட்ட கடையின் உரிமையாளர் பர்ஹத் மிகுந்த அக்கறையுடன் ஆலோசனைகளை கூறி சொந்த மன மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்கு தினாஜை அனுப்பி வைத்தார்.

இவர் துபாயிலிருந்து நாடு திரும்பி ஊரிலேயே சொந்தமாக தொழில் துவங்கும் முடிவின் படி தான் வெளிநாட்டில் பணியாற்றிய பர்ன்ச்சர் கடை அனுபவத்தின் படி அதே கடையை உள்ளூரில் துவக்கினார்.அதிலும் குறிப்பாக தனது பழைய முதலாளியின் கடை நினைவாக அதே பெயரை கடைக்கு வைத்தார்.அதோடு இன்றும் உள்ளூரிலிருந்து தனது வெளிநாட்டு முதலாளிடன் தொடர்பில் அவ்வப்போது ஆலோசனைகளையும் பெற்று தொழில் செய்து வருகிறார்.

இது குறித்து தினாஜ்கான் கூறியதாவது
பொதுவாக சொந்த தொழில் செய்ய போகிறேன் என்றால் மனதார‌ வாழ்த்தும் முதலாளிகள் வெகு குறைவே... ஆபிஸ்பாயாக பணிக்கு சேர்ந்த என்னுடைய உழைப்பை அறிந்து எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்து நன்றாக கவனித்து கொண்டார் எனது முன்னாள் முதலாளி பர்ஹாத். 9 ஆண்டுகள் பணியாற்றிய நான் அவரிடம் திடிரென ஊர் திரும்பி தொழில் செய்கிறேன் என்றவுடன் எவ்வித மறுப்பு சொல்லாம அதற்கு தேவையான அலோசனைகளை வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து மன மகிழ்வோடு இந்தியா அனுப்பி வைத்தார். அதே போன்று நான் ஊரில் தொழில் தொடங்கிய போது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இன்றும் எனக்கு ஆலோசனைகளைகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி வருகிறார் இவரை போன்ற முதலாளிகள் இக்காலத்தில் அபூர்வமே என்கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-