அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
துபாய் : துபாயில் கடந்த 4ந்தேதி துவங்கிய தமிழ் திருக்குரான் மாநாடு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டு வளாகத்தில் கண்காட்சிகள் ,பயிலரங்கம், பல்வேறு போட்டிகள், ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாநாட்டில் சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி, மவுலவி அப்துல் பாசித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அல் குர் ஆனை அணுகும் முறைகள் ,அல் குர் ஆன் கூறும் அழைப்பியல், அல் குர் ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றன. மேலும் இஸ்லாமிய பார்வையில் திருமணம்,அமைதி பெற்ற உள்ளத்தை பெற வழிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன. மாநாட்டு வளாகத்தில் கண்காட்சிகள் ,பயிலரங்கம், பல்வேறு போட்டிகள், ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து சமயத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் ஏற்பாடுகளை கீழக்கரை நஜிமுதீன், கீழக்கரை ரஃபி அஹமது, ஜாபர் உள்ளிட்ட பலரின் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகளை முகைதீன் அப்துல் காதர், ஜாபர், கீழக்கரை கமால் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கிய விழாகுழுவினர் செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-