அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களில் சிறுநீர் கலக்கப்பட்டு விற்பனை செய்துவருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியில் உள்ள Hail என்ற நகரில் வாசனை திரவியங்களை (Perfumes) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது, தொழிற்சாலைக்குள் சுமார் 38 லிட்டர் அளவுள்ள சிறுநீர் பாட்டில்களில் சேமித்து பாதுகாக்கப்பட்டுள்ளதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், சில அனுமதிக்கப்படாத பொருட்களும் அங்கு பாதுகாப்பட்டிருந்ததால், அவற்றை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து துறை சார்ந்த அமைச்சர்களுக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
இந்த சோதனை குறித்து பேசிய Saad Al-Thowaini என்ற நகராட்சி அதிகாரி, ‘தொழிற்சாலையில் சிறுநீர் பாட்டில் பாட்டிலாக சேமிக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தொழிற்சாலையில் பணியாற்றிய வெளிநாட்டினர்களை கைது செய்துள்ளதுடன், தொழிற்சாலையையும் மூடியுள்ளோம்.
மேலும், முறையான அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. வாசனை திரவிய பாட்டில்களில் சிறுநீர் கலக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்திக்கொள்ள பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-