அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 

துபாய்: வளைகுடா நாடுகளில் மழை பெய்யும் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகும். அப்பகுதிகளில் அரிதாகத்தான் மழை பெய்யும். அதிலும் ஆலங்கட்டி மழை என்பது மிகவும் அரிதாகவே நிகழும். இந்நிலையில் ஐக்கிய அரபு குடியரசில் (யுஏஇ) பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. ஷார்ஜா, ராஸ் அல் கைமா, புஜேரா, துபாய் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அப்பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

துபாய் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் பனிக்கட்டிகள் சிதறி கிடந்தன. மலைப்பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால், ஐரோப்பிய பகுதிகளில் காணப்படுவதை போன்று யுஏஇ மலைப்பகுதிகள் அனைத்தும் வெள்ளை போர்வை போர்த்தியபடி, வெள்ளை நிறமாக இயற்கை அழகுடன் காட்சியளித்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-