அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

திங்கள், 2 பிப்ரவரி 2016  துபாயில் வேலைக்கு சென்று சித்ரவதை அனுபவிக்கும், மதுரையை சேர்ந்த ஒரு இளைஞர், உரிமையாளர் தன்னை சித்ரவதை செய்யும் வீடியோவை தன்னுடைய தாய்க்கு அனுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வசிப்பவர் கலாவதி. அவரது மகன் சரவணக்குமார்(28). இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கொடுக்காமல் தோட்ட வேலை, செக்யூரிட்டி மற்றும் எடுபிடி வேலைக்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து தனக்கு வேலை வேண்டாம் என்றும், இந்தியாவிற்கு செல்ல விரும்புவதாகவும் அவர் அவரின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். ஆனால் வேலையை விட்டு அனுப்பாமல் அந்த உரிமையாளர் அவரை சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து அவர் தூதரக அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், தன் உரிமையாளர் தன்னை சித்ரவதை செய்வதை சரவணன் வீடியோவாக எடுத்து, வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு வீடியோவாக அனுப்பியுள்ளார். இதைக் கண்டு கதறிய அவரின் தாய், தன் மகனை மீட்டுத்தருமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-