அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக தரப்பில் செய்யாததை எல்லாம் செய்ததாக சாதனைப் பட்டியல் வாசித்து, ரத,கஜ,துரக,பதாதிகளுடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் வடிவத்தில் அவர்களுக்கு ஆப்பு வந்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் என்ன...என்ன நடந்தது? பால், மின்கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது எப்படி? என்ற தகவல் தற்போது வாட்ஸ்அப் மூலமாக மக்களிடத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது, 2011ம் ஆண்டு ஜனவரியில் இதே தமிழகத்தில்.. என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் அந்த தகவல் களத்தில் 1 லிட்டர் பால் விலை ரூ.16 (இன்றைக்கு ரூ.46).,

1கிலோ பருப்பு விலை ரூ.68 (இன்றைக்கு ரூ.180),பேருந்து கட்டணம் ரூ.10 (இன்றைக்கு ரூ.23)., மின்சாரக்கட்டணம் ரூ.500 (இன்றைக்கு ரூ.1400),புதிய வாட் வரியால் மாத பொருட்கள் ரூ.2000 (இன்றைக்கு ரூ.2800), மணல் ஒரு லோடு ரூ.3500 (இன்றைக்கு ரூ.7200), 5பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட் ரூ.6000 (இன்றைக்கு ரூ.14000), தமிழக கடன் ரூ.98 ஆயிரம் கோடி (இன்றைக்கு ரூ. 2லட்சத்து பத்தாயிரம் கோடி) சிந்திப்பீர்... சுருக்கமாக சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச்செலவும் 120 சதவீதம் என இருமடங்காக உயர்ந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தின் கடன் சுமையும் இருமடங்காகியுள்ளது. மேலும், அதில் கடந்த 5 ஆண்டுகாலங்களில் தமிழகத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், அரசின் செயல்பாடுகள், விவசாய பிரச்சனைகள், அதிகரித்துள்ள குற்றசம்பவங்கள், ஜாதி மோதல்கள் என அரசின் அனைத்து நிர்வாக சீர்கேடுகளும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள், இனி நீங்கள் இந்த தேர்தலில் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதை இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் வாழ்க்கை வசப்படும் என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது. இதன் கடைசி வரிகள் தற்போதைய தமிழக முதல்வரின் தேர்தல் பிரசார பாணியில் ‘செய்வீர்களா...? நீங்கள் செய்வீர்களா...?’ என்று முடிவது ஹைலைட்டாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-