அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று(1-2-16) காலை சுமார் 10.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

குடியுரிமைத்துறை அதிகாரிகள் இருக்கும் இடத்துக்கு சென்றபோது தனது பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த அவர், உடனடியாக தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாரிடமாவது பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பும்படி கூறினார்.

காலை நேரம் என்பதால் சாலை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த ரஜினிகாந்த், பாஸ்போர்ட் கொடுத்தனுப்பும் நபரை மோட்டார் சைக்களில் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தினார். அதேபோல் விரைந்து வந்த அவரது உதவியாளர்களில் ஒருவர் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தார்.

அதுவரை விமான நிலைய வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்த ரஜினிகாந்தை பேட்டி காண முயன்ற ஒரு நிருபரிடம், தன்னை பத்ம விபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, காலை 11.15 மணியளவில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய மலேசிய விமானம் அரைமணி நேரம் தாமதமாக சுமார் 11.45 மணியளவில் புறப்பட்டு சென்றது.

ரஜினிக்காக அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லவில்லை. அதே விமானம் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்தபோது கடுமையான பனிமூட்டமாக இருந்ததால் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்தே இன்று மலேசியாவுக்கும் தாமதமாக புறப்பட்டு சென்றது என மீனம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-