அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை: முன்னாள் அமைச்சர் ரமணா, பஞ்சாயத்துக்கு வந்த பெண்ணை மடக்கி 2வது மனைவியாக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு முறை பதவி பறிப்புக்கு காரணமாக இருந்த கள்ளக்காதல் குறித்தும் அடுக்கடுக்கான தகவல்கள் தலைமைக்கு சென்ற வண்ணம் உள்ளன. பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமணா. கடந்த 20ம் தேதி இவரது அமைச்சர் பதவி மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

ஆனால் ரமணாவின் பதவியை பறித்தபோது, அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைவருமே ஏன் உலகத்தின் மூலை, முடுக்குகளில் உள்ள அனைத்து தமிழர்களுமே காரணம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதானே என்று சர்வ சாதாரணமாக கூறி விட்டார்கள். அவர்கள் கூறுவதற்கு காரணம், இரு நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் ரமணா, அரைக்கால் டவுசர் அணிந்து ஒரு வீட்டின் அறையில் தரையில் அமர்ந்து ஒரு பெண்ணுடன் இருப்பதுபோன்ற புகைப்படம்தான். மற்றொரு படத்தில் கீழே ஆடை அணிந்துள்ளாரா, இல்லையா என்ற அளவுக்கு உடலை மறைத்து ரோஜாப்பூ இதழ் குவியலுக்குக்குள் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு பெண் அவருக்கு முத்தமிடுவது போன்று இருக்கும்.
சட்டசபை நடந்து கொண்டிருந்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் இந்த படங்கள் வெளியாகின. படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பேருக்கு மேல் பார்த்து, தங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டார்களாம். இது உளவுத்துறையின் கவனத்துக்குச் செல்ல, அவர்கள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த படங்களைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா, ரமணாவை சட்டப்பேரவை கூட்டத்துக்கு வரக்கூடாது என்று கூறி விட்டாராம். அதனால் கடந்த 19, 20ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்துக்கு ரமணா வரவில்ைல. சட்டசபை நடக்கும் நேரத்தில் அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து பறித்தால், எதிர்க்கட்சிகள் அதை சட்டப்பேரவையிலும் எழுப்பி விடுவார்கள் என்று நினைத்ததால், பதவியை பறிக்கவில்லை.

ஆனால் பேரவை கூட்டம் முடிந்த 21ம் தேதி மாலையில் ரமணாவின் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இப்போது ரமணாவின் காதல் விளையாட்டுகள் குறித்த கிளுகிளு தகவல்களை தலைமைக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளே அனுப்பி வருகிறார்களாம். இதைப் பார்த்ததும், இப்படி ஒரு ஆளை எப்படி இவ்வளவு நாள் அமைச்சராக வைத்திருந்தோம் என்று தலைமையே நொந்து கொண்டதாம். ரமணாவின் காதல் லீலைகள் குறித்து அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்கள் கூறியதாவது: அமைச்சர் ரமணா, சென்னை அடுத்த திருநின்றவூரில் வசித்து வந்தார். அம்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இதற்காக திருநின்றவூரில் இருந்து சைக்கிளில்தான் சென்று வந்தார். அதேநேரத்தில் திருநின்றவூரில் மெடிக்கல் ஷாப்பும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களுடன் திருநின்றவூரில் வசித்து வந்தார். 2006ம் ஆண்டு திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது மெடிக்கல் ஷாப் அருகே சுரேஷ் என்பவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவரது மனைவிதான் லதா. இந்த கடைக்கு லதா அடிக்கடி வந்து செல்வார். அப்போது அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளருக்கும் லதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது தெரிந்ததும் சுரேஷூக்கும் லதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளருடன் உள்ள பழக்கத்தை லதா கைவிட மறுத்ததால், அது குறித்த பஞ்சாயத்து, அதிமுகவில் வளர்ந்துவரும் தலைவராக இருந்த ரமணாவிடம் சென்றது. லதாவை பார்த்த மாத்திரத்தில் ரமணாவுக்கு காதல் பிறந்தது. பஞ்சாயத்து செய்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி லதாவுடன் பேச ஆரம்பித்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. இது தெரிந்ததும், கணவர் சுரேஷூம், ஓட்டல் உரிமையாளரும் லதாவை விட்டு விலகிவிட்டனர்.
இதனால் திருநின்றவூரில் லதாவின் வீட்டுக்கு சுதந்திரமாக சென்று வந்தார். இது தெரிந்ததும் ரமணாவின் தந்தை சத்தம்போட்டார். ஆனால் ரமணா கேட்கவில்லை. லதாவுடன் காதல் மயக்கத்தில் இருந்தார். மகன் திருந்தமாட்டான் என்று முடிவு எடுத்த அவரது தந்தை தனது மருமகள், பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னை மயிலாப்பூருக்கு வந்து விட்டார். தான் சாகும்வரை தன் முகத்தில் ரமணா முழிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். இது ரமணாவுக்கு மேலும் வசதியாகிவிட்டது. 2006ல் அதிமுக சார்பில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது திருவள்ளூரில் லதாவுடன் தங்கினார். அதோடு லதா-சுரேஷ் தம்பதிக்கு பிறந்த மகளையும் அழைத்து வந்தார்.
கூடவே இலவச இணைப்பாக லதாவின் 2 சகோதரிகள், ஒரு தம்பியையும் அழைத்து வந்து விட்டார். தேர்தலில் தோற்ற பிறகு, அரசால் தடை செய்யப்பட்ட பாக்குகளை, தடை செய்வதற்கு முன்னால் ஏஜென்ட் எடுத்து விற்பனை செய்து வந்தார். 2011 தேர்தலில் அவர் திருவள்ளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வாட்ஸ் அப்பில் வெளியான படம், தனக்கு மனைவி என்று சொல்லி லதாவின் பெயரைத்தான் எல்லா இடங்களிலும் கொடுத்தார். அமைச்சரானவுடன் பவர்புல்லான வருவாய்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் லதாவுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள மயிலாப்பூரில் முதல் மனைவி இருந்தும் கவனிக்கவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் முதல் மனைவி வழக்குப்போடவே, விவகாரம் வீதிக்கு வந்தது. அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

பின்னர் முதல் மனைவியிடம் முறைப்படி விவகாரத்து பெற்றார். இந்த தகவலை கார்டனுக்கு தெரியப்படுத்தவே, மீண்டும் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மீண்டும் பவர்புல்லாக இருந்தார். முதல் முறையாக அமைச்சர் ஆனவுடன், முழு கட்டுப்பாடும் லதாவின் கைக்குச் சென்றது. அவரது தம்பிதான் அமைச்சரின் உதவியாளராக இருந்தார். மணல் கடத்தல், கான்ட்ராக்ட் முதல் டிரான்ஸ்பர் வரை அனைத்தும் லதாவின் கண் அசைவில்தான் நடந்தது. மொத்த வருமானத்தையும் லதாதான் கவனித்து வந்தார். கட்சியில் நியமனம் முதல், மாதம் மாதம் மாமூல் வரை அவர்தான் கவனித்தார். ரமணாவுக்கு பயப்படுவதைவிட லதாவுக்குத்தான் கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் பயந்தனர்.

அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டாலும், அவர் திருந்தவில்லை. எப்போது பதவி பறிபோகும் என தெரியாது, அதுவரை சுருட்டுவோம் என மாறினார். மேலும் அவருக்கு கட்சிப் பதவி, அமைச்சர் பதவியை விட லதாவின் கணவர் என்ற பதவிதான் ரொம்ப பிடித்திருந்தது. அதனால் லதா மீது காதல் மயக்கத்தில் இருந்தார். வீட்டில் சிறுவன் போல ஷார்ட்ஸ், டீசர்ட் அணிந்திருப்பார். அமைச்சர் பதவி கிடைத்தபோது அவருக்கு வீட்டில் விருந்து வைத்துள்ளனர். அப்போதுதான் 5 கூடை ரோஜா பூக்களை வாங்கி, அதை 2 பேர் மீதும் போட்டு, அதன் மீது அமர்ந்திருக்கும் போட்டோக்களை லதாவின் தங்கைகள் செல்போனில் எடுத்துள்ளனர்.

ஒருநாள் தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் செல்போன் ரிப்பேர் என்று லதா கொடுத்துள்ளார். அப்போது செல்போனில் இருந்த படங்களை உதவியாளர் தன் போனில் எடுத்து வைத்துக் கொண்டார். கடந்த மாதம் தனது உதவியாளரை லதா விரட்டி விட்டுள்ளார். இதனால் கோபமடைந்த உதவியாளர், ரமணாவின் மனைவி லதாவால் கட்சி பதவி பறிக்கப்பட்ட ஜெயதேவன் என்பவரிடம் சரணடைந்தார். இந்த கிளுகிளு படங்களையும் அவரிடம் காட்டினார். இதன்பின்னர்தான் அந்தப் படங்கள் வைரசாக வாட்ஸ்அப்பில் பரவியது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ரமணாவின் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

8 கான்ட்ராக்டர்கள்
ரமணா பற்றி கார்டனுக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன. திருவள்ளூர் பகுதி அதிமுகவினர் ரமணா பற்றி கூறியதாவது: ரமணா பெயருக்குத்தான் அமைச்சராக இருந்தார். ஆனால் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை கவனித்தது எல்லாம் லதாதான். இவருக்கு கீழ் 8 கான்ட்ராக்டர்கள் இருந்தனர். அவர்களுக்குத்தான் சாலை போடுவது முதல், மராமத்து பணிகள் வரை கொடுத்து வந்தார். அதில் 30 சதவீதம் கமிஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கமிஷனை பெற்ற பிறகுதான் வேலைக்கான ஆர்டரை கொடுப்பாராம். இதைத் தவிர, அரசின் பதவிகள் அனைத்துக்கும் இவர்தான் கட்சிக்காரர்களிடம் பணம் வாங்குவாராம். வெறும் கையெழுத்து மட்டும் ரமணா போடுவாராம். மனைவி லதாவை ஒரு நாள் கூட பார்க்காமல் இருந்தது இல்லையாம்.

வெளியூர் சென்றாலும் அழைத்துச் சென்று விடுவாராம். போகிற இடம் எல்லாம் அந்த ஊரின் சிறப்புகளைச் சொல்லி, பெரிய செலவை அதிகாரிகள் தலையில் கட்டி விடுவாராம். கட்சிக்காரர்களும் மாதம் குறிப்பிட்ட பணத்தை கொடுக்க வேண்டும் என்று லதா கூறுவாராம். பண விவகாரங்களில் சிக்கல் உண்டாக்கினால் லதா, அவரது தம்பி, அப்பா ஆகியோர் ரவுண்டு கட்டி அடிப்பார்களாம். பெண்ணிடம் அடி வாங்க பயந்ேத பலரும் கேட்ட பணத்தை கொடுப்பார்களாம். சில நாட்களுக்கு முன்னர்தான் தம்பியுடன் லதாவுக்கு சண்டை ஏற்படவே அவரை விரட்டி விட்டாராம் என்று தெரிவித்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-