அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...UAE துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் முகமது பின் றாசித் அல் மக்தூம தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி துபாய் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகம் பிறந்துள்ளது..

தனது மந்திரி சபையில் பதவி வகிக்க 25 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த திறமையான நபர்கள் தேவை.. பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாலோசித்து மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் பெயர் பட்டியல் பரிந்துரை செய்ய வேண்டும்.

பல அரபு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குன்றிய சூழலில் UAE தனது நிலையை தக்க வைத்ததில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர்களின் சிந்தனை சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயக நாடுகளில் தனக்கு பிறகு வாரிசு அரசியலில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தனது மகனை ராணுவ பணிக்கு அனுப்பிவிட்டு ஆட்சிக்கு உதவ மந்திரியை தேடும் துபாய் பிரதமர் ஒரு அழகிய முன்மாதிரி..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-