அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு ஆங்கில கல்வியை புறக்கணித்து,கல்வியில் பின்தங்கி,உள்நாட்டில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்றி சுட்டெரிக்கும் வெயிலையும்,கடும் குளிரையும் கொண்டுள்ள அரபு நாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடியோடும் சமூகமே இந்திய முஸ்லிம் சமூகம்!அங்கும் கல்வியறிவு இல்லாததால் அடிமட்ட வேலைகள்தான் கிடைக்கின்றன.


குடும்பங்களை பிரிந்து அகதிகளாய் வாழ்வை தொலைத்து,இந்திய நாட்டின் முன்னேற்றதிற்க்காக பெருமளவில் அந்நிய செலாவணியை ஈட்டி தரும் தியாகிகள்தாம் முஸ்லிம்கள்!ஆனால்,அவர்களின் முன்னேற்றத்திற்காக கிஞ்சிற்றும் எந்த அரசும் உதவி செய்யவில்லை.


தங்கள் சொந்த உழைப்பை கொண்டே வாழ்ந்து வரும் முஸ்லிம்கள்,கல்வியில் கவனம் செலுத்தினால் அடுத்த தலைமுறையாவது ஏற்றம் பெரும்.அரபு நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை கல்வியின் உதவி கொண்டு நிறுவிய உயர்ஜாதி இந்துக்களின் வாழ்வு முஸ்லிம்களுக்கு படிப்பினை!எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் விழிக்க வேண்டிய தருணமிது!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-