அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
டெல்லி: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமீரக பட்டத்து இளவரசருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மதிய விருந்து அளித்தார். அதில், பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள், இருநாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இளவரசருடனான சந்திப்பின்போது, அவரது வருகையால், இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுடன் நல்லுறவு பேண வேண்டும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் விருப்பத்தை இந்தியாவும் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார்

கடந்த 1975ம் ஆண்டு, ஷேக் ஜாயித், டெல்லிக்கு வந்திருந்தபோது, தான் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இளவரசருக்கு ஜனாதிபதி பரிசளித்தார். மேலும் ஜனாதிபதி பிரணாப்பின் ஊடகத்துறை செயலாளரும், இந்தியாவின் முன்னாள் துபாய் துணை தூதருமான வேலுராஜமணி எழுதிய India and the UAE – In celebration of a Legendary Friendship’ என்ற புத்தகத்தையும் பரிசளித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-