அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...​“குவைத்திற்கு வேலைக்கு சென்ற மகளை மீட்டு தாருங்கள்”

குவைத்திற்கு வேலைக்கு சென்று கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவலும் இல்லாமல் இருக்கும் மகளை மீட்க வேண்டும் என்று திருச்சியில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகள் சபியா, கடந்த 2004ம் ஆண்டு, முகவர் ஒருவர் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் வரை சபியா, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் இருந்து எந்தவித தொடர்பும் இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் சபியாவை அனுப்பிய ஏஜெண்டையும் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள், இன்று மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் குவைத்தில் உள்ள மகளை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-