அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 


நாம் ஓய்வாக இருக்கும் போது சமூக வலைத்தளங்களை திறந்து, நமக்கு பிடித்த நண்பர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வோம். இருப்பினும், தன்னுடைய புதிய கார், புதிய வீடு என புகைப்படங்களை இந்த ஊடகங்களில் பதிவேற்றி அலப்பரை கொடுக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது, நமக்கு அவ்வாறு வாழ்க்கையில் அமையவில்லையே என்ற காம்ப்ளக்ஸ் உணர்வு ஏற்படும்.

அதனால் பேஸ்புக் பக்கத்தில் உள்ள 'அன்ப்ரெண்ட்' என்ற நண்பர்களை நீக்கும் பட்டனை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மன அமைதியைக்குலைக்கும் நண்பர்களை அவ்வாறு நீங்கள் நீக்கி விடவும் செய்யலாம்

* பேஸ்புக்கில் உங்களுக்கு சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் சந்தோஷமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணத்தை பற்றியும் பதிவிடுவார்கள். தங்களின் ஆடம்பரமான குளியலறை முதல் சுற்றுலாக்கள் வரை அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றுவார்கள். அவர்களின் எண்ணம், தங்கள் நண்பர்களிடம் பந்தா செய்வதே. இப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்குள் காம்ப்ளக்ஸ் உணர்வை தூண்டினால், அவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடவும். அதற்காக அவர்கள் ஒரு துளி கூட வருந்தப்போவதில்லை!

* உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள சில நண்பர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அரசியல், மதம் மற்றும் இதர சிக்கலான பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடுவார்கள். சில நேரங்களில் மனதைப் புண்படுத்துகிற விஷயத்தையும், மோசமான வார்த்தைகளையும் கூட பயன்படுத்துவார்கள். அதனால் அவர்களால் நீங்கள் எந்தவொரு ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அவர்களை உங்கள் நண்பர்களின் பட்டியலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்.

* சமூக வலைத்தளங்கள் என்பதே சந்தோஷத்திற்காகவும், கேளிக்கையான மற்றும் விந்தையான படங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் தான். இருப்பினும், உங்களது நண்பர் இதனைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் பகிரும் படங்களை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். இவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியுள்ளதா என்ன?

* கண்டிப்பாக உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் நண்பர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இத்தகைய நபர்களாக தான் இருக்கும். அவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூட மாட்டீர்கள். அவர்களின் ப்ரெண்ட் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எப்போதாவது சேட் செய்திருப்பீர்கள். உங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள அனைத்து அந்நியர்களையும் முதலில் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள். காரணம், அவர்களின் பின்புலம் தெரியாமல் அவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லதல்ல. நேரில் அந்நியர்களுடன் பேசாத நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை ஏன் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-