அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  உங்களது ஸ்மார்ட் போனிற்கு புத்தம்புதிய தமிழ் திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி?திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த காலம் மாறி, திரைப்படங்களை தொலைகாட்சி பெட்டியிலும், எமது கணணிகளும் பார்க்கும் காலம் வந்தது. இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்போது திரைப்படங்களை எங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்தவாறே பார்க்கும் காலமாக மாறிக்கொண்டு வருகிறது இன்றைய சமூகம்.

இன்று சந்தைக்கு வரும் ஸ்மார்ட் போன்-களும் பெரிய அளவிலான ஸ்க்ரீன்-ஐ கொண்டிருப்பதால் அனைவருமே திரைப்படங்களை தங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்தபடியே பார்த்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் இன்றைய சமூகத்தினர் ஸ்மார்ட் போன் மூலமாக திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக நேரத்தை சொல்லலாம். இன்றைய சூழ்நிலையில் நேரம் என்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. எவருமே தங்களுடைய நேரத்தை வீணடிக்க தயாராக இல்லை. ஆகவே வாகனங்களில் பயணங்களை செய்யும் போது, காலையில் வேலைக்கு செல்லும் போது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது ஸ்மார்ட் போன் மூலமாகவே திரைப்படங்களை பார்த்து கொள்கிறார்கள்.
ஆனால் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் பெரும்பாலானோருக்கு எங்கிருந்து தங்களது ஸ்மார்ட் போனிற்கு திரைப்படங்களை தரவிறக்கி கொள்வது என்பது பிரச்சினையாகவே உள்ளது.

ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போனிற்கு எப்படி திரைப்படங்களை தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களது போன் ப்ரொவ்செர்-இல் கூகுள்-இற்கு சென்று கீழே காட்டி இருப்பது போல் டைப் செய்யுங்கள்.தேடல் முடிவில் கிடைக்கும் முதலாவது தளத்திற்கு செல்லுங்கள்.இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து புத்தம்புதிய திரைப்படங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
சரி.. இந்த தளத்தில் இருந்து உங்களுக்கு தேவையான தமிழ் திரைப்படங்களை எப்படி உங்களது ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.உங்களுக்கு தேவையான திரைப்படத்தை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து குறிப்பிட்ட பேஜ்-இல் கீழே செல்லுங்கள்.

அங்கே நான் கீழே காட்டி இருப்பது போல் அம்புக்குறி ஒன்று காணப்படும்.இந்த அம்புக்குறியை கிளிக் செய்வதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு குறிப்பிட்ட திரைப்படத்தை தரவிறக்கி கொள்ள முடியும்.குறிப்பிட்ட திரைப்படத்தை தரவிறக்க விருப்பம் இல்லை என்றால், உங்களால் குறிப்பிட்ட திரைப்படத்தை ஆன்லைன் மூலமாகவும் பார்த்து ரசிக்கும் வசதியை தருகிறது இந்த அருமையான தளம்.

Thanks :

Tech in தமிழ்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-