அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள Al-Dayer நகரில் உள்ள பள்ளி அலுவலகத்திற்கு சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்துள்ளார்.


பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.


இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய ஆண் ஆசிரியரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலுக்கான அதிகாரப்பூர்வமான காரணங்கள் வெளியாகாத நிலையில், பள்ளியின் முதல்வர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு முன் விரோதம் இருந்ததாகவும் அல்லது அவர் மனநல நோய் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-