அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 Dear readers, a 5-year old kid is in need of your helpவேலூர்: உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு உங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுங்கள். கரூரைச் சேர்ந்தவர் தாவூத் அலி. கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் செல் ரீசார்ஜ் கடையில் வேலை பார்க்கிறார். அவரது மகள் மஹ்முதா பீ(5). அவருக்கு நிமோனியா வந்து பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொண்டையில் ஓட்டை விழுந்துள்ளது. 
 
Dear readers, a 5-year old kid is in need of your help தொண்டையில் இருந்து நாசிக்கு செல்லும் குழாய் உள்ளிருந்து அரித்துவிட்டது. முதலில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியில் இருந்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Dear readers, a 5-year old kid is in need of your help சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் சிகிச்சைக்கு ஏற்கனவே அவரது பெற்றோர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் ரூ.2 லட்சம் வரை செலவாகலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வறுமையில் வாடும் அந்த குடும்பத்தால் சிகிச்சைக்கான பணத்தை அளிக்க முடியவில்லை. இந்நிலையில் தாராள மனம் கொண்டவர்கள் நிதியுதவி செய்து தங்களின் மகளை காப்பாற்றுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
  உதவி செய்ய விரும்புவோர் தாவூத் அலியின் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 Dear readers, a 5-year old kid is in need of your help
வங்கி கணக்கு விபரம், 

ஏ. தாவூத் அலி 
வங்கி கணக்கு எண்: 1227101041768 
ஐஎப்எஸ்சி கோடு- CNRB0001227
 கனரா வங்கி கரூர் கிளை 
மேலும் விபரம் அறிய விரும்புவோர் தாவூத் அலியை 8883249378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-