அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

துபாய்: ஷார்ஜாவில் ஸ்கைலைன் பல்கலைகழக வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துபாய் இந்திய துணை தூதரகம், ஷார்ஜா இந்தியன் அஸோசியேசன், ஸ்கைலைன் பல்கலை கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. முதலில் யோகா நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நடையோட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் கே ஜே யேசுதாஸ் கலந்து கொண்டார். மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உரைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஸ்கைலன் பல்கலைகழக நிறுவன தலைவர் கமல் பூரி, நிர்வாக குழு இயக்குநர் நிதின் ஆனந்த் ,ஷார்ஜா இந்திய சங்க தலைவர் ஒய்.ஏ ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-