அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், நேற்று, கண்ணாடி சுவர் சரிந்து, 55வது முறையாக விபத்து ஏற்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், மேற்கூரை சரிவு, கண்ணாடிகள் உடைவது, கிரானைட் கற்கள் உடைந்து விழுவது என, இதுவரை, 54 சம்பவங்கள் நடந்து உள்ளன. காலை, 8:30 மணிக்கு, உள்நாட்டு முனையம், புறப்பாடு பகுதி உள்ளே, மேலாளர் அறைக்கு செல்லும் வழியில், 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கண்ணாடி சுவர், திடீரென்று சரிந்து விழுந்தது.இந்த சம்பவம் நடந்த போது, டில்லி, கொச்சி மற்றும் மதுரை செல்ல வேண்டிய பயணிகள், அந்த வழியே சென்ற வண்ணம் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே மாற்ற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு இருந்த கண்ணாடி தான் நொறுங்கி விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என்றனர்.சென்னை விமான நிலையத்தில், கண்ணாடி நொறுங்கி விழுந்த சம்பவங்களில், இதுவரை, 11 பேர் காயமடைந்து உள்ளனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-