அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமிக்கு ஆபரேசன் மூலம் காது கேட்கும் திறன்: டாக்டர்கள் சாதனை


 வேலூர்: வேலூர் விருதம்பட்டை சேர்ந்த ஷபீர், தாஜிரா தம்பதியருக்கு 4 குழந்தைகள். இதில் 15 வயதுடைய 2வது மகனுக்கு காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதேபோல் 4வது குழந்தையான 4 வயது யாஸ்மினுக்கும் இதே கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காது கேளாதோர் பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுத்திறன் சான்றிதழ் பெற, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த டீன் செல்வராஜன், அறுவை சிகிச்சை செய்து பேசவைக்க முடியும் எனக்கூறினார். பின்னர் இஎன்டி துறை தலைவர்கள் மதனகோபால், பாரதிமோகன் மற்றும் சென்னை பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி 9ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது குழந்தை யாஸ்மினுக்கு காது நன்றாக கேட்கிறது. அதேபோல் வாய் பேசும் திறனும் ஏற்பட்டுள்ளது. ஓரிரு வார்த்தைகள் பேசுகிறது.

இதுகுறித்து டீன் செல்வராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தை யாஸ்மினுக்கு ‘காக்ளியார் இம்ப்ளாண்ட்’ அறுவை சிகிச்சை மூலம் தற்போது காது நன்றாக கேட்க ஆரம்பித்துள்ளது. வாய் பேசுவதற்கான பயிற்சிகள் ஓராண்டுக்கு வழங்கப்படும். அதன்மூலம் கண்டிப்பாக இந்த குழந்தை பேசும் திறன் பெறும். மேலும் 6 வயத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கவும், வாய் பேசவும் செய்ய முடியும். இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.7 லட்சம். வேலூர் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்து அதில் வெற்றிப் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-