அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  பெரம்பலூரில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிறப்பு இளைஞர் காவல் படையைச் சேர்ந்த நபரை கத்தியால் குத்திய இளைஞர்கள் 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கோரையாறு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மணிகண்டன் (23). இவர், அரும்பாவூர் காவல் நிலையத்தில் சிறப்பு இளைஞர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள திரையரங்கில் உறவினருடன் மணிகண்டன் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டு, மணிகண்டனை கத்தியால் குத்தினார்களாம். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் பிருத்திவி வாசன் (18), எளம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் நீலகண்டன் (எ) சிவா (18), வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சத்தியபிரபா (21) ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-