அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுச்சேரி,

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கி வருவதில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், தலைமை பாஸ்போர்ட்டு அதிகாரியுமான முக்தேஷ் கே.பர்தேசி தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன் 60 லட்சமாக இருந்த பாஸ்போர்ட்டு வினியோகம் சென்ற ஆண்டுடன் முடிவடைந்த காலத்தில் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டில் பாஸ்போர்ட்டு சேவா திட்டங்கள் வாயிலாக புதிய பாஸ்போர்ட்டு மையங்களை நிறுவி பாஸ்போர்ட்டுகளை விரைவாக வழங்க வகை செய்யப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட்டு அலுவலகங்களுடன் 90 சேவா கேந்திரங்கள் உள்ளன. உலகிலேயே பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கும் 3-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது எந்த ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பாஸ்போர்ட்டு தொடர்பான வசதிகள் இல்லாமல் இல்லை. அனைத்து இடங்களிலும் அதற்கான வசதிகள் உள்ளன.

வெளிநாடுகளுக்கு படிக்க செல்வது, வேலைக்கு செல்வது, சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதிகரித்து வருவதால் பாஸ்போர்ட்டுகளின் தேவையும் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-