அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், ராக்கிங் கொடுமையால் 3 விரல்களை இழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வரிடம் போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை, திருமயத்தைச் சேர்ந்த ஷேக் கபீர் என்ற மாணவர், திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவருடைய கல்லூரியில் அந்த மாணவரை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று அந்த மாணவரின் வலது கையில் 3 விரல்களை இழந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கிங் கொடுமை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து இனாம்குளத்தூர் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் தீவர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-