அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  
Dubai fog impact: 136 accidents in 3 hours
துபாய்: அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக நேற்று காலை 3 மணி நேர இடைவேளையில் துபாயில் 136 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. துபாயில் தற்போது இதமான தட்பவெப்பம் நிலவிவருகிறது. குறைந்தபட்ச வெப்ப நிலை 18 டிகிரி செல்சியசை ஒட்டியும், அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் காணப்படுகிறது.  

இதன்காரணமாக, அதிகாலை மற்றும் காலைவேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிரது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை கடும் பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இந்த 3 மணி நேர இடைவேளைக்குள் துபாய் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, வாகன விபத்துகள் தொடர்பாக 810 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. 
அந்த அழைப்புகளின்படி, மொத்தம் 136 இடங்களில் விபத்துகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அனைத்தும் லேசான விபத்துகள் என்பதால் உயிர் சேதம் பற்றி தகவல் இல்லை. கார்களில் வைப்பர்களை பயன்படுத்துமாறும், முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லுமாறும், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-