அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
  சென்னை, பிப் 25- சிறுபான்மை சமூகமான தமிழக முஸ்லிம்களிடையே 258 இயக்கங்கள் இருப்பது பெருமை தேடித் தராது; நமது தனித்தன்மைகளை இழந்து விட்டு நாம் ஒருபோதும் முஸ்லிம்களாக வாழ முடியாது என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை மண்ணடி மூர் தெரு சந்திப் பில் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநில தலைமை நிலையப் பாடகர் ஏ ஷேக் மதார் ஆமிரி கிராஅத் ஓதினார்.மவ்லவி ஏ.எம்.எம். சாலிஹ் சேட் பாகவி துவக்கவுரையாற்றினார்.

வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் வரவேற்புரையாற் றினார். எம். கமருதீன் இஸ்லாமிய கீதம் பாடினார்.

மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், ஏ.எம்.எஸ் பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ். ஷேகு ஜமாலுதீன், மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி, மாநில தலைமை நிலைய பேச்சாளர் மவ்லவி கே.எஸ் சாகுல் ஹமீது ரஹ்மானி ஆகியோர் உரையாற்றினர்.

இந் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது-வருகின்ற மார்ச் 10 வியாழன் அன்று விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டிற்கு தமிழக முஸ்லிம் சமுதாயம் பெரும் திரளாக வருகை தர வேண்டு மென வேண்டுகோள் விடுப்ப தற்காக இந்நிகழ்ச்சி நடை பெறுகிறது.மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 69வது நிறுவன நாள். 1948 மார்ச் 10 புதன்கிழமை சென்னை ராஜாஜி மண்ட பத்தில் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டம் காயிதே மில்லத் தலைமையில் நடைபெற்றது.அகில இந்திய முஸ்லிம் லீகிற்கு 300க்கும் மேற்பட்டோர் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் இருந்தனர்.

ஆனால் அக்கூட் டத்தில் 27 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதிலும் கேரளாவில் இருந்து 5 பேர், தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் மட்டுமே உறுப்பினர்கள். மற்றவர்கள் சிறப்பு அழைப் பாளர்கள்.அந்தக் கூட்டத்தோடு அகில இந்திய முஸ்லிம் லீகின் நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டு முஸ்லிம் லீகின் சரித்திரத்தை தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இயக்கம் உருவாக்கப்பட்டு புதிய சட்ட திட்டங்களும், நடைமுறை களும் வகுக்கப்பட்டன.

மூன்று லட்சியங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியங்களாக மூன்று விஷயங்களை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள்.ஒன்று தேசிய ஒருமைப்பாடு இந்திய தாயகத்தை நேசித்து அதன் இறையாண்மையை காத்து அதன் வளர்ச்சிக்கு துணை புரிவது. இரண்டாவது சமய நல்லிணக்கம் பரந்து விரிந்த பாரத பூமியில் 4636 வகுப்புகள் இருக்கின்றன.

எண்ணற்ற மொழிகள் பேசப்படுகின்றன. பல்வேறு மதங்கள் பின்பற்றப் படுகின்றன. பல கலாச்சாரங்கள் நடைமுறையில் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் நல்லிணக்கத்திற்கு துணை புரிவது.மூன்றாவது சிறுபான்மை யினரின் தனித்தன்மைகளை காத்தல் இந்த மாபெரும் நாட்டில் இந்துக்கள் பெரும் பான்மையாக வாழ்கிறார்கள்.

முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையாக வாழ்கிறார் கள்.சிறுபான்மை மதங்களை பின்பற்றக்கூடியவர்கள் அவரவர் மத நெறிகளின்படி வாழ்வதற்கு உரிமை இருக் கிறது. அதற்கு இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கி இருக்கிறது.சிறுபான்மையினருக் கென்று தனித்த அடை யாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை, மத நம்பிக்கைகளை, கலாச்சார தனித் தன்மைகளை காத்து நிற்பது.இந்த மூன்று லட்சியங் களும் காயிதே மில்லத் அவர்களால் பிரகடனப் படுத்தப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலில் இயக்கம் நடத்தும் நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம்.

சிறுபான்மையினரின் தனித்தன்மைகள்

மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காப்பது என்பதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பள்ளிவாசல் அடையாளம்; இறந்தவர்களை அடக்கம் செய்யும் கபரஸ்தான் அடை யாளம்; பெண்கள் அணியும் பர்தா அடையாளம்; ஷரீஅத் சட்டம் அடையாளம்; இந்த அடையாளங்கள் 1500 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்து வரக்கூடியவை.எங்களுக்கென்று தனி சிவில் சட்டங்கள் இருக் கின்றன. இஸ்லாமிய திருமண சட்டங்கள் தனி யாக இருக்கின்றன.

இந்த சட்டங் களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒரே சட்டத்தின் கீழ் வாழுங்கள் என்றால் நாங்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்.சிறுபான்மையினர் என்பது இந்தியாவை பொறுத்தவரையில் மத வழி, மொழி வழி அடிப்படையில் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை-சிறுபான்மை நிர்ணயிக்கப்படு கிறது.காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மை; அங்கு இந்துக்கள் சிறுபான்மை; தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மை, இந்துக்கள் பெரும்பான்மை. இதுவரை யிலும் ஏற்கப்பட்ட நடைமுறை.

உச்சநீதிமன்றமும் இதைத்தான் தெளிவுப்படுத்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படுகிறது.ஆனால் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக ஆட்சி யில் கல்வித்துறை ஒரு விசித்திர மான உத்தரவை வெளியிட்டது. சிறுபான்மை என்பது மாநில அளவில் அல்ல அதை வட்டார அளவில்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அதன் உத்தரவு.சென்னையில் உள்ள பெரியமேடு வட்டாரத்தில் கிருத்துவ கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் விண் ணப்பிக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டது.

நாங்கள் சிறுபான்மை அந்தஸ்து பெற்றவர்கள். ஏன் எங்களை அந்த அந்தஸ்து கோரி மீண்டும் விண்ணப்பிக்க சொல்கிறீர்கள் என்று அந்த கல்வி நிறுவனம் கேட்ட போது உங்கள் வட்டாரத்தில் கிருத்துவர்கள் பெரும் பான்மையாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் சிறுபான்மை அந்தஸ்து பெற முடியாது என தமிழக கல்வித்துறையால் காரணம் சொல்லப்பட்டது.இதனை எதிர்த்து அந்த கல்வி நிறுவனம் நீதிமன்றம் சென்றது.

வட்டார அளவில் சிறுபான்மை பெரும்பான்மை யை நிர்ணயிக்க எந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத் தியது. சில அதிகாரிகளின் முட்டாள்தனமான செயல் பாடுகளால் இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. சட்டத்தை அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றுகிறார்கள். இன்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் முஸ்லிம்களால் உருவாக்கப் பட்டு சிறுபான்மை அந்தஸ்து டன் செயல்பட்டு வருகிறது.ஆனால் இவைகளின் சிறுபான்மை அந்தஸ்தை பறிப்பதற்கு பா.ஜ.க. அரசு முயல்கிறது. நீங்கள் சிறுபான்மை என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. நீங்கள் இந்துவாகவே வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது. நம்முடைய தனித்தன்மையை இழந்து விடுவோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் விழுப்புரத்தில் மார்ச் 10 மஹல்லா ஜமாஅத் ஒருங் கிணைப்பு மாநில மாநாட்டை நடத்துகிறோம்.

மஹல்லா ஜமாஅத்

தமிழ்நாட்டில் பள்ளி வாசலை மையமாகக் கொண்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துகள் உள்ளன. இம் மாநிலத்தில் பள்ளிவாசல்கள் மூன்று வகையாக உள்ளன. முதலாவது வகை அந்தந்த ஊர் முஸ்லிம்கள் பள்ளிவாசலை எழுப்பி மஹல்லா ஜமாஅத் துகளை உருவாக்கியிருக்கிறார்கள். 2-வது வகை நவாப்களின் நிர்வாகத்தில் உரு வாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இவை மிகச் சில பள்ளிகள் மட்டுமே. மூன்றாவது, தனி நபர்கள் கட்டி கொடுத்த பள்ளிவாசல்கள். இவற்றில் பெரும்பான்மையானவை மஹல்லா ஜமாஅத்து களால் நிர்வகிக்கப்படும் பள்ளிவாசல் களே. மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் துகள்தான் இயற்கையான கட்டமைப்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றார்கள். இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள். பள்ளியை எழுப்பினார்கள்.

சமூகத்தை ஒருங்கிணைத்தார்கள். அங்கேயே மரணித்தார்கள். அவர்களுக்கு அங்கு ஒரு அடையாளம் உருவாக்கப் பட்டது. இதுதான் முன்மாதிரி. நபிகளாரின் காலத்திற்கு பிறகு சத்திய சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள், இமாம்கள், இறைநேச செல்வர்களான வலிமார்கள், இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்கெல்லாம் தங்கியிருந்து மார்க்க சேவை செய்து மரணமடைந்தார்களோ அங்கெல்லாம் அடக்கத் தலங்கள் உருவாக்கப்பட்டன. தர்காக்கள் இப்படித்தான் வந்தன.

ஒரு ஊர் எப்படி உருவானது என்பதை அறிய அந்த ஊரின் தர்காவில் அடங்கியுள்ள வலிமாரின் சரித்திரத்தை புரட்டி பார்த்தால் தெரிந்து விடும். ஒவ்வொரு தர்காவிலும் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கு ஐவேளை தொழுகை நடைபெறுகிறது. இதில் என்ன புதிதாக குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்.பள்ளிவாசலை கட்டுவது, நிர்வகிப்பது மஹல்லா ஜமாஅத்துகளுடைய வேலை.

நான் ஒரு ஊர் பள்ளிவாசல் விழாவுக்கு சென்றிருந்தேன். ரூ. 4 கோடி ரூபாய் செலவில் குளத்தின் நடுவில் அழகாக அமைக்கப்பட்டிருந்தது அந்த பள்ளிவாசல். வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம். பள்ளிவாசலில் பாங்கு சொல்லி பிரசங்கமும் நடந்து கொண்டிருந்த போது அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து ஒலிபெருக்கி யில் பாங்கு சத்தம் ஒலித்தது. சிறிது நேரத்தில் பயான் சத்தமும் வெளி வந்தது. அது இடையூறாக இருந்தது. நான் என்ன ஏது என்று விசாரித்த போது விரல் விட்டு எண்ணும் சில இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து போட்டி பள்ளியை தொடங்கி ஜமாஅத் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். இது என்ன அநியாயம்.

தமிழ்நாட்டில் 45 லட்சம் முஸ்லிம்கள்தான் உள்ளனர். ஆனால் நாலரை கோடி முஸ்லிம்கள் இருப்பதை போல் கற்பனையில் வாழ்கிறார்கள். 45 லட்சம் முஸ்லிம்களுக்கு 258 இயக்கங்கள் என்று சொல்வது பெருமைப்படக்கூடிய செய்தி அல்ல. இப்படி இயக்கங்கள் தோன்றிக் கொண்டே இருப்பது எல்லோரையும் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதற்கா? நரகத்திற்கு அழைத்து செல்வதற்கா? கம்பெனி திறப்பதை போல் இயக்கங்கள் தொடங்கி கொண்டே இருப்பது சமுதாயத்திற்கு கேவல மில்லையா?இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கி றார்கள்.

பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் ஒரே நாளில்தான் தீபாவளி கொண்டாடுகிறார்கள். கிருத்துவர்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள்.

ஒரே நாளில்தான் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏக தெய்வ கொள்கை பேசும் முஸ்லிம்கள் மட்டும் மூன்று நாள் பெருநாள் கொண்டாடுவது கேவலமில்லையா? பிற சமுதாய மக்கள் நம்மளை பார்த்து கேலி பேச மாட்டார்களா? இந்த செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப் புணர்வை ஏற்படுவதற் காகத்தான் மஹல்லா ஜமாஅத் மாநாடு நடக்கிறது.

முஸ்லிம் லீக் முன்வைக்கும் மூன்று விஷயங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரையில் சமுதாயத்திடம் மூன்று விஷயங்களை நாங்கள் தொடர்ந்து முன் வைத்திருக் கிறோம். முதலாவது பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும். ஜமாஅத் என்றால் மஹல்லா ஜமாஅத் மட்டும்தான். அரபி நாடுகளில் கபீலா என்று அழைப்பதை போல், ஆப்கானிஸ்தானில் ஜிர்கா என்று அழைப்பதை போல், ஐரோப்பிய நாடுகளில் சூறா ஜமாஅத் என்று அழைப்பதை போல், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் மஹல்லா ஜமாஅத் என்று அழைக்கப்படுகிறது. அந்த மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்று வது நம்முடைய கடமை.இரண்டாவது மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்க வேண்டும். மார்க்கத்தை கற்று கொடுத்தவர்கள் அவர்கள் தான்.ஆலிம்கள் இல்லை யென்றால் இஸ்லாம் இல்லை. அல்லாஹ், ரசூல் என்ற சொல் எங்கிருந்து வந்தது.? ஈமான், இஸ்லாம், குர்ஆன், தொழுகை என்பதையெல்லாம் யார் சொல்லித்தந்தது.? இவைகளெல்லாம் மதரஸாக்களிலிருந்து கற்று தரப்பட்டவைதான். அதை கற்றுத் தந்தவர்கள் ஆலிம்கள்.

அதனால்தான் ஆலிம்களை நபிகள் நாயகத் தின் வாரிசு என்கிறோம். அந்த உலமாகளை கண்ணியப்படுத்துவதும், மார்க்க விஷயங்களில் அவர்களை பின்பற்றுவதும் நம்முடைய கடமை.மூன்றாவது இந்திய ஜனநாயக நாட்டில் அரசியல் இயக்கம் நடத்துவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாட்டில் பாரம்பரியமாக செயல் பட்டு கொண்டிருக்கும் இயக்கம். நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் உறுப்பினர்களை அனுப்பிய பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு. முஸ்லிம்களின் தனித் தன்மைகளை காப்பதற்கும், ஷரீஅத் சட்டத்திற்கு பதிலாக பொது சிவில் சட்டம் திணிக்கப்படாமல் தடுப்ப தற்கும் அது ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தூர நோக்கான சிந்தனையும், சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் கொண்டவர்க ளால் வழி நடத்தப்படக்கூடிய அரசியல் பேரியக்கம்.

அரசிய லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழிகாட்டுதலை சமுதாயம் ஏற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை உங்கள் இடத்தில் வேண்டுகோளாக வைக்கி றோம். ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். ஆனால் இதை நாங்கள் சொல்லிக்கொண்டே இருப்போம்.இந்த பேரியக்கம்தான் விழுப்புரத்தில் மார்ச் 10 மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடத்துகிறது. ஒட்டுமொத்த சமதாயமும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.சீதக்காதி பிரைமரி தலைவர் கே.எம். இஸ்மா யில் நன்றி கூறினார். மவ்லவி எஸ்.எம். முஹம்மது தாஹா மிஸ்பாஹி துஆ ஓதினார்.

கலந்துகொண்டோர்

கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல் லாஹ், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூசுப் குலாம், மாவட்டச் செயலா ளர் பிலால் ஹுசைன்,மாவட்ட துணைத் தலைவர்கள் ஐஸ்ஹவுஸ் அப்துல் ரஹ்மான், நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், மண்ணடி ஏ.எச். இஸ்மாயில், வடசென்னை மாவட்ட செயலாளர் கமுதி சம்சுதீன், ஆரிஸ் பாபு, அல்தாப், ஏ.கே. ரபீ, ராயபுரம் ஹுசேன், ஷாஜித், ஷேக் மீரான், தென்சென்னை மாவட்டத் தலைவர் பூவை எம்.எஸ் முஸ்தபா, மாவட்டச் செய லாளர் மேத்தப்பிள்ளை மரைக்காயர், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் எண்ணூர் செய்யது இப்றாஹீம், மாவட்டச் செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர், ஷேக் முஹம்மது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.தாவூது, மாவட்டச் செயலா ளர் அல்லா பக்ஷ், மாவட்ட பொருளாளர் நூர் முஹம்மது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளா ளர் முஸ்தபா, செம்பாக்கம் காஜா மொய்தீன் உள்ளிட் டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-