அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி, பிப். 4.

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க 'வாட்ஸ் அப்' குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர்.

ஒரு 'வாட்ஸ் அப்' குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது 'வாட்ஸ் அப்'. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு 'வாட்ஸ் அப்'-ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் 'வாட்ஸ் அப்' தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டாலர் கட்டணத்தையும் 'வாட்ஸ் அப்' ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-