அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
​ மத்திய கிழக்கு, முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான ஷீஆக்கள் மற்றும் ஈரானினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆயுதக் குழுக்களை அழித்தொழிக்கும் முயற்சியில் உருவாகியுள்ள இஸ்லாமி நாடுகளின் கூட்டுப்படை ஸஊதியில் பயிற்சிகளில் ஈடுபட வருகை தந்துள்ளன.

பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரும் கூட்டுப்பயிற்சியாக இது அமைய இருக்கிறது. “வடக்கின் இடிமுழக்கம்” என பெயரிடப்பட்டுள்ள குறித்த கூட்டுப்பயிற்சியில் ஈடுபட இணைந்துள்ள நாடுகளாவன - சஊதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பஹ்ரைன், செனகல், சூடான், குவைட், மாலைதீவு, மொரொக்கோ, பாகிஸ்தான், சாட், துனிசியா, கொமரோஸ், ஜைபூதி, ஓமான், கட்டார், மலேசியா, எகிப்து, முர்தானியா, மொரிஸியஸ் ஆகிய நாடுகளுடன் பெனின்சூலா பாதுகாப்பு படைகளும் இணைந்துள்ளன சஊதி பிரஸ் ஏஜன்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த பயிற்சி தரை, ஆகாய, கடல் ரீதியான பயிற்சிகளாக அமைவதுடன் அதி நவீன் போர் விமானங்கள், மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். அத்துடன் பிராந்தியத்தில் நாங்கள் அனைவரும் பலமாக இருக்கிறோம், எமக்கு எதிரான சவால்களை முறியடிப்பதற்கு தயாராக இருக்கிறோம் எனும் மிகத் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு தெரிவிப்பதே குறித்த பயிற்சியின் நோக்கம் எனவும் அந்த செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-