அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

துபாய். பிப் 22.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமதூர் மக்கள் துபாய் பஜாரில் சந்திக்கும் போது இந்த வருடம் சங்கமம் எப்போது நடைப்பெறும் என சங்கமம் விழா குழுவினரிடம் கேட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை(19-02-2016) இரவு 8:30 மணியளவில் தேராவில் உள்ள பிஸ்மில்லா ரூமில் கடந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த
N.P.அலிராஜா, A.சேட் ஷர்புதீன்,H.சர்புதின்,S.அபு சாலிஹ் S.சாதிக் பாஷா மற்றும் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடினார்.
அப்போது வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த சங்கமம் நிகழ்ச்சி நடைப்பெற்ற அதே துபை முஸ்ரிப் பூங்காவில் இந்த வருட சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.


அமீரகத்தில் வசிக்கும் வி.களத்தூர் மக்கள் இந்த வருட சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு தரும் படி விழா குழுவினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-