அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை 8,792 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார்.

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமைவகித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் 
வி.களத்தூர் உள்பட 24 மையங்களில் நடைபெற உள்ளது. 8,792 பேர் எழுத உள்ளனர். இவர்களில் 4,418 மாணவர்கள், 4,374 மாணவிகள். 10 ஆம் வகுப்பு தேர்வு வி.களத்தூர் உள்பட 32 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 9,637 பேர் எழுத உள்ளனர். 

இந்த அரசுப் பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேர்வு மையங்களில் செய்திருக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு சென்று வர அந்தந்த வழித்தடங்களில் உரிய பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எந்தவித தொய்வும் இன்றி பாதுகாப்பான முறையிலும், சிறப்பான வகையிலும் அரசு தேர்வுகளை நடத்த அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் கணேசன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இரா. எலிசபெத் மற்றும் காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-