அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸாமை சேர்ந்த சந்திர சர்மா என்ற நபர் வெறும் 15 லட்சம் செலவில் ஹெலிகாப்டரை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்..கவ்ஹாத்தியில் இருந்து 450 தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்த சர்மா 3 வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..இவர் வெல்டிங் தொழிலை செய்து வருகிறார் ..

தனது நபரின் பொருளாதார உதவியுடன் மிக குறைந்த செலவில் உருவாக்கியுள்ள இந்த ஹெலிகாப்டர் சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஹெலிகாப்படரை உபயோகிக்க அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அரசு அனுமதி அளிக்குமா அல்லது .. இந்தியாவின் அறிவியல் மேதையான ஜி டி நாயுடு சில ஆயிரங்களுக்கு உருவாக்கிய காரை புறக்கணித்தது போல இதையும் புறக்கணிக்குமா அல்லது இவரது திறமையை புறக்கணித்து இவரின் விண்ணப்பத்தை நிராகரிக்குமா.. அல்லது ஏதாவது ஒரு கார்பரேட் முதலை இவரது திறமையை திருடுமா என்பதை காலம் தான் பதில் கூறும்..

எது எப்படியோ ஹெலிகாப்டர் என்றாலே பல கோடிகள் பெறுமானம் என்ற கார்பரேட் முதலைகளின் கொளுத்த லாபகரமான வியாபாரத்தை சில லட்சங்களின் செய்ய முடியும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திய சர்மாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-