அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இதுதான் இஸ்லாம்!
லட்சக்கணக்கான ஹிந்து சகோதரர்கள் கும்பகோணத்தில் குழுமும் மகாமகத்திற்கு...

அப்துல் பாரி என்கிற இஸ்லாமியர் 1,100 மூட்டை அரிசியும், 1 லட்சம் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கியுள்ளார்.


புற்றீசல் போல பல மதவெறி கூட்டங்கள் வந்தாலும்....

ஆண்டாண்டு காலமாக சகோதரத்துவத்தோடு பழகி வரும் மதநல்லிணக்கத்தை ஒருபோதும் சீர்குலைக்க முடியாது.


கும்பகோணத்தில் மகா மகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்குவதற்காக முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் பாரி 1,100 மூட்டை அரிசியும், 1 லட்சம் தண்ணீர் பாட்டிலும் நேற்று வழங்கினார்.
கும்பகோணத்தில் மகா மக பெருவிழா வருகிற 13ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினரும், மகா மகத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவுள்ளனர். அதற்காக அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராம் குமார் வரவேற்றார். மாநில செயற் குழு உறுப்பினர் சந்திர சேகர மூப்பனார் முன்னிலை வகித்தார்.
விழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் உரிமையாளர் அப்துல் பாரி வழங்கிய 1,100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் (அரை லிட்டர்) பாட்டில்களையும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜிஆர்.மூப்பனார் மகா மகத் தின் போது அன்னதானம் வழங்கவுள்ள பல் வேறு அமைப்பினருக்கும் பிரித்து வழங்கினார்.
இதில்ம பிராமணர் சங்கத்திற்கு 500 மூட்டை அரிசி, 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில், இஸ்கான் அமைப்பிற்கு 300 மூட்டை அரிசி, 50 ஆயிரம் தண்ணீர் பாட்டில், ரோட்டரி சங்கத்திற்கு 200 மூட்டை அரிசி, 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில், தேப்பெருமா நல்லூர் சிவன் கோயில் அன்னதான கமிட்டிக்கு 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில், அகில பாரத துறவியர்கள் மாநாட்டிற்கு 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில், குடந்தை ஜவுளி சங்கத்தினருக்கு 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில், காவல் துறைக்கு 100 அரிசி மூட்டைகள் உள்பட பல் வேறு அமைப்பினருக்கு மொத்தம் 1100 மூட்டை அரிசியும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் மகா மகத்தின் போது அன்னதானம் வழங்குபவர்களிடம் வழங்கப் பட்டது.
இந்த விழாவில் நகர தலைவர் சங்கர், மாநில செயலா ளர் அசோக் குமார், மாநில இணை செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-