அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அரசின் உதவி இல்லாமலேயே சாதனை படைத்த ஷகீல் அஞ்சும்..!மத்திய பிரதேச மாநிலத்தின் ‘பாவ்டி கேடா’ என்ற முழு கிராம பஞ்சாயத்துக்கு, அரசின் உதவி இல்லாமலேயே இலவச ‘வை ஃபை’ வசதியை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார், முஸ்லிம் எஞ்சினியரிங் மாணவி, ஷகீல் அஞ்சும்.


ஷகீல் அஞ்சுமின் இப்பணியில், அவருக்கு உறுதுணையாக பானு, துஷார் பர்தாரே, அபிஷேக் பர்தாரே ஆகிய 3 மாணவர்கள் செயல்பட்டுள்ளனர்.

ஷகீல் அஞ்சும் குழுவினரின் இந்த இலவச சேவையை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தருண் குமார், ஷகீல் அஞ்சும் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

விழாவில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், கல்வித்துறை உயரதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டு ‘பாவ்டி கேடா’ கிராம மக்களுக்கு இலவச வை ஃபை வசதியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-