அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜனவரி 20 2016
குவைத்தில் தொழில் விதிமுறைகள் மீறும் குவைத்தி( Sponsor)-யிடம் இருந்து வேலை மாற்றம் பெற அனுமதி
வழங்கபடும் என Manpower athoratiy-க்கு அனுமதி வழங்கியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பை Manpower athoratiy குவைத் தொழிலாளர் அலுவலகங்களுக்கு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி பின்வரும் விதிமுறைகள் ஏதேனும் மீறியவர்களுக்கு Work permit மாற்ற பெற தகுதியானவர்கள் என Manpower athoratiy யின் இயக்குநர்
Mohammed Al mousa தெரிவித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் சில விதிமுறைகள் விவரம் வருமாறு:
1) Sponsor 2010 வெளியிட்டுள்ள தொழிலாளர் சட்டம் மீறியதாக
தெரிய வந்தால்
2) தொழிலாளிக்கு விடுமுறையில் தாயகம் செல்ல அனுமதி மறுப்பது
3) தொழிலாளி மற்றும் Sponsor
உடன்பாடு ஏற்பட்டு 2010 தொழிலாளர்
சட்டத்தின் 41-ஆவது விதிமுறை மீறாமல் தொழிலாளியை வேலையினை விட்டு பிரித்து விடுதல்
4) தொழிலாளியின் ராஜினாமா
கடிதத்தை Sponsor ஏற்று கொள்ளுதல்
5) தனிப்பட்ட தொழிலாளர் சட்டத்தின்
48 மற்றும் 50ஆவது பிரிவுகள் மீறாமல்
இருத்தல்
6) ஒரு Sponsor கீழ் மூன்று வருடத்திற்கு குறையாமல் வேலை பார்த்திருக்க வேண்டும்
போன்றவர்கள் இந்த சலுகை பெற
தகுதியானவர்கள்
அனால் குவைத் அரசின் தொழில் சம்மந்தப்பட்ட வேலைக்கான ஒப்பந்தம் செய்துள்ள தொழிலாளர்கள் அதன் காலாவதி முடியாமல் Visa மாற்றம் செய்ய அனுமதி கிடையாது.
News source: Asianet news
(குறிப்பு:மேலு‌ம் தகவல் தெரிய 19:01:2016 அன்றைய Asianet news-யின் Gulfnews பாருங்கள்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-