அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
வெறுமை தாண்டவமாடும் தொகுதி!
செல்வத்தில் கொழிக்கும் தமிழ்ச்செல்வன்!!
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை யாக பெரம்பலூர் கலெக்டர் செய்து முடித் தப் பணிகளை யெல்லாம் தான் செய்ததாக தம்பட்டம் அடித்து, கொடுத்த வாக்குறுதிகளைக் கெட்ட கனவைப் போல் மறந்து விட்டு, மேடைக்கு மேடை வசன நடை யாகப் பேசி, பொம்மை எம் எல் ஏ வாக தமிழ்ச்செல்வன் காலந் தள் ளிய கதை தான் பெரம் ப லூர் தொகுதி மக் க ளின் புலம் ப லாக இருக் கி றது.
கடந்த 2011ம் ஆண்டு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார் பா கப் போட் டி யிட சசி கலா உற வி னர் இள வ ர சி யின் அண் ண னும், பெரம் ப லூர் மாவட் டப் பிஆர் ஓ வா கப் பத வி யி லி ருந் த வ ரு மான கண் ண தா ச னால் சீட்டு கிடைத் த தும், எல் லாம் மேல இருக் கி ற வன் பார்த் துக் கு வான் எனத் தேர் தலை சந் தித் த வர் தான் தமிழ்ச் செல் வன். அதே நினைப் பு டன் பத விக் கா லம் முடி யும் வரை தொகுதி மக் களை அம் போ வென விட் டு விட்டு, காலம் போன சம யத் தில் கலெக் டர் செய் தப் பணி க ளை யெல் லாம் தான் செய்த பணி க ளா கத் தம் பட் டம் அடித் துக் கொண்டே வலம் வரு ப வர் தான் தமிழ்ச் செல் வன் எம் எல்ஏ. மக் கள் பிரச் னை க ளுக் கா கவோ, விவ சா யி க ளின் பிரச் னை க ளுக் கா கவோ தீர்வு காணா மல், தீர்க்க முய லா மல் மேடை க ளில் வச ன ந டை யில் அம்மா புகழ் பா டி ய து தான் மிச் சம். பெரம் ப லூர் மாவட் டத் தில் 38 ஆண் டு க ளுக்கு மேலாக இயங்கி வரும் சர்க் கரை ஆலை, இயந் தி ரக் கோளா று க ளால் அர வைப் ப ணி கள் தள் ளிப் போ வ தும், அத னால் வெட் டப் பட்டு ஆலை முன்பு அணி வ குத்து நிற் கும் கரும் பு கள் காய்ந்து போவ தும் ஆண் டு தோ றும் தொட ரும் அவ ல மா கி விட் ட நி லை யில், அதற்கு தீர் வு காண துளி யே னும் அக் கறை காட் டா த வர் தான் தமிழ்ச் செல் வன். கரும் புக்கு நிலுவை தொகை கேட்டு கத றிய அழு த போது கல் நெஞ் சத் து டன் இருந் த வர் தான் தமிழ்ச் செல் வன் என்று கரும்பு விவ சா யி கள் இன் ற வும் கண் ணீர் வடிக் கின் ற னர்.
பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் மருத் து வர் பணி யி டங் களை நிரப் பு வ தற் குக் கூட எம் எல்ஏ எந்த முயற் சி யை யும் எடுக் க வில்லை. அங்கு புற நோயா ளி க ளுக் கான கழிப் பிட, குடி நீர் வச தி கள் இருக் கி றதா என் று கூட அவ ருக்கு தெரி யாது.
கடந்த அக் டோ பர், டிசம் பர் மாதங் க ளில் கொட் டித் தீர்த்த கன ம ழை யால் மலை யாளப் பட்டி, அரும் பா வூர்,மேட் டூர், பூலாம் பாடி பகு தி க ளில் பாக்கு, வாழை, மர வள்ளி வேப் பந் தட்டை, பெரம் ப லூர், ஆலத் தூர் தாலு கா வி லுள்ள கிரா மங் க ளில் பருத்தி, மக் காச் சோ ளம், சின் ன வெங் கா யப் பயிர் கள் அழிந் தது. பாதிக் கப் பட்ட விவ சா யி க ளுக்கு ஆறு தல் சொல் லக் கூட போகாத எம் எல்ஏ, நிவா ர ணத் தொகையை எப் படி வாங்கி தரு வார். தேர் த லில் அதி முக சார் பா கப் யார் போட் டி யிட் டா லும், தொகுதி பக் கம் எம் எல்ஏ வந் தால் வம் பி ழுக் கப் போ வ தாக பருத்தி, வெங் காய விவ சா யி கள் ஆவே சத் து டன் குமு று கின் ற னர்.
வேப் பந் தட் டை யில் இயங் கும் அரசு கலைக் கல் லூரி, சொந் தக் கட் டிட வச தி யின்றி கடந்த ஒன் றரை ஆண் டு க ளாக , தாலுகா, ஒன் றிய அலு வ லங் க ளில் இயங் கிய போதும், இட வ ச தி யின்றி விதி களை மீறி செமஸ் டர் தேர் வு களை மேஜைக்கு 4 பேரை உட் கார வைத்து எழுத செய் போ தும், ஓராண் டுக் கும் மேலாக டெபு டே ச னில் நிய மிக் கப் பட்ட பேரா சி ரி யர் க ளைக் கொண்டு, தற் கா லிக முதல் வர் க ளைக் கொண்டு கல் லூரி இயங் கி ய தை யும் எம் எல்ஏ வேடிக்கை பார்த்த அவ லம் தொடர் கி றது.
எச னை யில் கல் கு வா ரித் தொழி லா ளர் கள் தெரு வி ளக்கு வச தி யின்றி, பட்டா இன் றித் பரி த விப் ப தைக் கண்டு மனம் இரங் க வில்லை. 5 ஆண் டு க ளாக தேசிய நெடுஞ் சா லையை வேப் பந் தட் டை யு டன் இணைக் கும் அனுக் கூர் சாலையை சீர மைக் க வில்லை. புகழ் பெற்ற சிறு வாச் சூர் கோயில் குளத் தையோ, இடிந் துள்ள கிழக் குப் பு றத்தை சீர மைக்க முய ல வில்லை.
பெரம் ப லூ ரில் தொடங் கப் பட்ட ரோலர் ஸ்கேட் டிங் மைதா னம் நிதிப் பற் றாக் கு றை யால் 2ஆண் டு க ளாக தடை பட் டுக் கிடக் கி றது. மைதா னத் திற் காக தரை யில் கம் பி கள் கட்டி ஒன் னே கால் வரு ட மாக கான் கி ரீட் போடா மல் மழை, வெயி லில் துருப் பி டித் துக் கிடக் கும் அவ லத்தை பற்றி எம் எல்ஏ கவ லைப் ப ட வில்லை.
குரும் ப லூர் பேரூ ராட் சி யில் இரு ளர் சமூ கத் திற்கு வீடு கட் ட வும், கற வை மாடு வாங் க வும் வழங் கப் பட்ட ரூ.67 லட் சத் திற் கான காசோலை தொலைந்து போன தாக ஆதி தி ரா வி டர் மற் றும் பழங் கு டி யி னர் ந லத் துறை அலு வ லர் கள் கூறி 3 ஆண் டு க ளா கி றது. இத னால் கைக்கு எட் டி யும் வாய்க்கு எட் டா மல் இரு ளர் கள் கண் ணீர் வடிப் பதை துடைத் து விட அவ ரது நெஞ் சில் ஈர மில்லை.
சொந்த ஊரில் மின் ந கர் பகு தி யில் 500க்கும் மேற் பட்ட குடும் பத் தார் ரேஷன் கார்டு இல் லா மல் பல ஆண் டு க ளாக அவ திப் ப டு வ தை யும் பற்றி அவர் கவ லைப் ப ட வில்லை காந்தி நகர்ப் பகுதி மக் கள் பட்டா கேட்டு அலை வ தை யும் வேடிக் கை தான் பார்க் கி றார்.
விவ சா யக் குடும் பத் தில் பிறந்து, மாவட்ட மாண வ ரணி அமைப் பா ள ராக இருந் தும், தொகு தி மக் க ளி டம் யாரெ னத் தெரி யா தி ருந்த தமிழ்ச் செல் வன், இன்று செல் வச் செ ழிப் போடு உயர்ந் தி ருக் கி றார். ஆனால் தொகு தி தான் செழிப் பின்றி வறு மை யின் கோரப் பி டி யில் சிக்கி தவிக் கி றது என்று மக் க ளு டன் அவ ரது சொந்த கட் சி யி ன ரும் ேகார சாக கூறு கின் ற னர்.
தொகு தி யில் ஏற் பட் டுள்ள புதிய பிரச்னை
அடை மழை பெய் தும் ஆலத் தூர் தாலு கா வி லுள்ள ஏரி கள் எது வுமே நிரம்பாதது குறித் து அக் கரை காட்ட வில்லை. மழை யால் கோடிக் க ணக் கான மதிப் பில் பாதிக் கப் பட்ட சின்ன வெங் கா யம், பருத்தி, மக் காச் சோ ளம், மர வள் ளிப் பயிர் க ளுக் கான நிவா ர ணம் வழங் க வில்லை. மக் காச் சோ ளம், பருத்தி, மர வள் ளிக் கான தொழிற் சா லை கள் அமைக் கா த தால் விவ சா யி கள் நஷ் டம். பெரம் ப லூர் நக ரில் கட் டுப் பா டற்ற ஷேர் ஆட் டோக் க ளால் போக் கு வ ரத்து சிக் கல்.

மக் கள் பிரச் னை களை தீர்க் கா மல் அரசு விழா வில் மட் டும் தலை காட் டு வது. கலெக் டர் போராடி நிறை வேற் றிய பணி க ளைக் கூட தானே செய் த தா கத் வாய் கூசா மல் தம் பட் டம் அடிப் பது. எந்த விழா வுக் கும் அழைப்பு இல் லா விட் டால் சம் பந் தப் பட் ட வர் யாராக இருந் தா லும் வயது வித் தி யா ச மின்றி மிரட் டு வது. முன் னாள் மாவட் டச் செய லா ளர், இந் நாள் மாவட் டச் செ ய லா ள ரி டம் இது வரை பந்தா காட் டி விட்டு, தற் போது பதவி முடி யப் போ கும் தரு வா யில் பம் மு வது. பஞ் சா யத் துத் தலை வர் க ளி டம் கூட பாய்ச் ச லைக் காட் டு வது என் றி ருந்த தமிழ்ச் செல் வ னுக்கு மறு ப டி யும் சீட் டு கி டைத்து கள மி றங் கி னால், அந்த ஆண் ட வன் நினைத் தா லும் வெற்றி பெற மு டி யாது என் கின் ற னர் பெரம் ப லூர் வாக் கா ளர் கள்.

சிறப் புப் பொரு ளா தார மண் ட லத் திற்கு நிலம் கைய கப் ப டுத் திய இடத் தில் விமான உதி ரி பா கம் தயா ரிக் கும் தொழிற் சாலை கொண் டு வ ரப் ப டும் என் றார். இது வரை பதி லே யில்லை.
அரசு மருத் து வக் கல் லூரி பெரம் ப லூ ரில் அமை வ தற்கு ஏற் பாடு செய் யப் ப டும் என் றார். இது வரை அதற் கான அறி விப்பே இல்லை.
நீரா தா ர முள்ள சின் ன முட்லு அணைக் கட் டுத் திட் டம் செயல் ப டுத்த நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார். எந்த அக் க றையும் செலுத் த வில்லை.
நகர்ப் புற, கிரா மப் பு ற மக் கள் அடிப் படை வச திக் காக கோரிக்கை முன் வைத் தாலே ஓடி வந்து குறை க ளைத் தீர்த் து வைப் பேன் என் றார். கொடுத்த மனுக் க ளுக்கே பதி லில்லை என அதி மு க வி னரே புலம் பு கின் ற னர்.
சட் ட மன்ற உறுப் பி னர் அலு வ ல கத் தில் எப் போ தும் என்னை சந் திக் க லாம் என் றார். ஆனால் அங்கு அவ ருக் குப் பதி லாக ஆளுங் கட் சி யி ன ரின் அரட் டைக் கச் சே ரி தான் நடக் கி றது.
வடக் கு மா தவி சாலை யில் கோயில் சொத் துக் களை, சிலை க ளைப் பாது காப் ப தற் காக கட்டப்பட்ட பாது காப் புப் பெட் ட கம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
பெரம் ப லூர் தெப் பக் கு ளத் தின் நீர் வ ரத் திற் காக 1911ம் ஆண்டு ஆங் கி லே யர் ஆட்சியில் ஜார்ஜ் மன் னர் பெய ரில் கட் டப் பட்ட வாய்க் கால் ஆக் கி ர மிப் பா ளர் க ளால் காணாமல் போன நிலை யில் நீர் வ ரத் துக் கான எந் த மு யற் சி யை யும் எம் எல்ஏ மேற் கொள் ளவே இல்லை.
மகே சன் தீர்ப் பு?
 எறையூர் சர்க்கரை ஆலையில் பாதியில் நிற்கும் இணை மின் உற்பத்தி திட்ட பணிகள்.

 போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் பெரம்பலூர்.


ரோலர் ஸ்கேட்டிங் மைதான கட்டுமானம் முடங்கி கிடக்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-