அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அபுதாபியில் “அய்மான்“ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை மீலாது விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்,   வி.களத்தூர் M.கமால் பாஷா அவர்கள் எழுதிய “ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்“ என்ற நூல் வெளியிடப்பபட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ஷேக்ஜாயித் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்மாநில செயலாளர் முஹம்மது அபூபக்கர் வெளியிட லால்பேட்டை சிராஜுதீன் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா்.

“ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் “ ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசத்தந்தை என்று போற்றப்படுபவா். ஐக்கிய அரபு அமீரகத்தை வடிவமைத்தவா். தேச மக்களின் நலனுக்காக உழைத்தவா். உலக மக்கள் அனைவர்கள் மீதும் மாறாத அன்பு கொண்டவா். மனித நேயம் மிக்க பண்பாளா். இந்தியா்களை நேசித்த மாண்பாளா்.


அமீரகத்தில் இலட்சக்கணக்கான தமிழா்கள் பணி செய்து வருகிறாா்கள். ஷேக் ஜாயித் அவா்களைப்பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்து உள்ளது. இந்நூல் வெளிவர உதவிய லால்பேட்டை சிராஜுதீன் அவா்களுக்கும், நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்த அய்மான் சகோதரா் கீழக்கரை சையத் ஜாபா் அவா்களுக்கும், லால்பேட்டை அப்துர்ரஹ்மான் மற்றும் அய்மான் பொறுப்பாளா்களுக்கும் நன்றி.
இந்நூல் ஏற்கனவே சென்னையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி் ஜே.எம் ஹாரூண் வெளியிட எழுத்தாளா் ஆளுர் ஷாநவாஸ். இயக்குநர்,நடிகா் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனா். கலாம் பதிப்பகத்தின் சாா்பில் இந்நூல் வெளியிடப்பட்டு உள்ளது.
தொடா்புக்கு :
கலாம் பதிப்பகம்
இலக்கம் : 6, 2 ம் பிரதான சாலை,, சி.ஐ.டி காலனி,மயிலாப்பூர்,சென்னை சென்னை 600 004
தொலைபேசி 91-44-24997373
9444025000,9940059400

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-