அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  என்றோ ஒரு நாள்
fb நின்று விடின்
சதாவும் பார்த்தவர்
சைக்கோ போல் அலைவார்.

கரியால் சுவரில்
ஹாய் ப்ரெண்ட்ஸ் என்று
பெரிதாக எழுதுவார்
பின்னர் அழிப்பார்.

கல்யாண அல்பத்தை
கனகாலம் பின்னாலே
லைற்றாகப் பார்ப்பார்
லைக் இன்றித் தவிப்பார்.

சிமெண்டுப் பேப்பரிலும்
சில வரிகள் படிப்பார்
கொமண்ட்ஸ் போட முடியாது
கோபத்தில் துடிப்பார்.

எடுக்கின்ற ஷெல்பியை
எங்கே போட என
கடுப்பாகி நிற்பார்
படுப்பார் மீண்டும்.

Fbஐ பார்த்தே
எப்போதும் உண்பவர்
பீங்கானை வெறித்து
பிரியாணி உண்பார்.

Female ID க்கு
Friend request கொடுப்பவர்
ஆமை போல் சுருண்டு
ஊமையாய் தவிப்பார்.

நோட்டிபிக்கேஷன் நோக்குதல்
நோய் போன்று ஆனதால்
சிகப்பால் இலக்கம் கீறி
சின்னதாய் டச் செய்வார்.

குறூப் சற் போனதால்
குறுக்குக் கோழியாய்
வெறுத்துப் படுப்பார்
விடிந்தும் எழும்பார்.

விக்குது ப்ரெண்ட்ஸ் என்றும்
வெட்டியாய் போட்டவர்கள்
துக்கத்தால் வாடுவார்
துடிப்பார் fbக்காய்

-MOHAMED NIZOUS-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-