அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
1.இயேசுநாதர் (ஈஸா அலை) ஏகஇறை கொள்கையையே நிலைநிறுத்தினார். (Deut 6:4, Mark 12:29)
திரு குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள இதனையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர் (திருகுர்ஆன் 4:171)

2. பன்றியின் இறைச்சியை இயேசுநாதர் (ஈஸா அலை) சாப்பிடவில்லை.(Leviticus 11:7)
இதேபோன்று முஸ்லிம்களுக்கும் பன்றியின் இறைச்சி தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்பதுமில்லை. (திருகுர்ஆன் 6:145)

3. இயேசுநாதர் (ஈஸாநபி) "அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள்மீது சாந்தி உண்டாவதாக என்று முகமன் கூறினார். (John 20:21)
இதையே முஸ்லிம்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுது பின்பற்றுகின்றனர்.

4. ஒரு விடயத்தை செய்யநினைக்கும்பொழுது, "இறைவன் நாடினால்" என்று இயேசுநாதர் கூறினார்
இதையே முஸ்லிம்களும் குரானில் கூறப்பட்டுள்ளவாறு பின்பற்றுகின்றனர். (திருகுர்ஆன்18:23- 24)

5. இறைவனை வணங்குவதற்கு முன்னர் இயேசுநாதர் (ஈஸாநபி) முகத்தையும், கைகளையும், கால்களையும் கழுவினார்.
முஸ்லிம்களும் தொழுகைக்கு முன்னர் இவ்வாறே வுழூ செய்கின்றனர்.

6. பைபிளில் கூறப்பட்ட முன்னைய நபிமார்களை போன்று இயேசுநாதர் (ஈஸாநபி) நெற்றியை தரையில் வைத்து இறைவனை வணங்கினார்.
(Matthew 26:39)
முஸ்லிம்களும் தங்களது இறைவணக்கத்தை இவ்வாறே செய்கிறார்கள்.
( திருகுர்ஆன் 3: 43)

7. இயேசுநாதர் (ஈஸா நபி) தாடி வைத்திருந்ததுடன், நீண்ட அங்கியும் அணிந்திருந்தார்.
முஸ்லிம்களை பொறுத்தவரை இது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகும்.

8. இயேசுநாதர் (ஈஸாநபி) நபிமார்கள் அனைவர் மீதும் நம்பிக்கை வைத்திருந்ததுடன், அவர்களது சட்டங்களையும் பின்பற்றினார்கள். (Matthew 5:17)
இதுபோன்றே முஸ்லிம்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அனைத்து நபிமார்களையும் கண்ணியப்படுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 3:84, 2:285)

9. இயேசுநாதருடைய (ஈஸா நபி) கண்ணியத்திற்குரிய பரிசுத்தமான தாயாரான மரியம் (அலை) தங்களது தலைமுடியை மூடியும், உடம்பின் பகுதிகள் வெளித்தெரியாமலும் கண்ணியமாக ஆடை அணிந்திருந்தார்கள். (1 Timothy 2:9, Genesis 24: 64-65, Corinthians 11:6)
இவ்வாறே முஸ்லிம்பெண்களும் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிந்து, அன்னிய ஆடவர்களின் பார்வையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர். (திருகுர்ஆன் 33:59)

10. இயேசுநாதரும் (ஈஸாநபி) பைபிளில் கூறப்பட்ட முன்னைய நபிமார்களை போன்று 40 நாட்கள் நோன்பிருந்தார்கள். (Exodus 34:28, Daniel 10:2-6 , 1 Kings 19.8, Matthew 4:1)
முஸ்லிம்களுக்கும் ரம்ளான் மாதத்தில் நோன்பிருத்தல் கட்டாயமாகும். அதனுடன் சேர்த்து அடுத்துவரும் மாதத்தில் விருப்ப நோன்பிருக்கிறார்கள். (திருகுர்ஆன் 2:183)

11.இயேசுநாதர் (ஈஸா நபி) வீட்டினுள் பிரவேசிக்கும்பொழுது, “இங்கு அமைதி உருவாகட்டுமென்றும்“, வீட்டில் இருப்பவர்களைபார்த்து, “உங்கள்மீது சாந்தி உண்டாகட்டுமென்றும்“ கூறுவார்கள். (Luke 10:5)
இதேபோன்றே முஸ்லிம்களும் வீட்டினுள் நுழையும்பொழுது "அஸ்ஸலாமுஅலைக்கும்" உங்கள்மீது சாந்தி நிலவட்டுமாக என்று கூறுமாறு திருகுர்ஆன் பணிக்கிறது. (திருகுர்ஆன் 24:61)

12. இயேசுநாதர் (ஈஸா நபி) விருத்தசேதனம் செய்திருந்தார். அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யும்பொழுது அவர்கள் 8 நாள் குழந்தை .(Luke 2:21) தோராவில் குறிப்பிட்டது போன்று, நபி ஆபிரஹாம் (அலை) அவர்களுக்கு எப்பொழுதுமே கட்டுப்படவேண்டிய உடன்படிக்கையென்று (விருத்தசேதனம் செய்தல்) இறைவன் கட்டளையிட்டிருந்தான். (Genesis 17,13)
திருகுர்ஆனில் 16:123 அத்தியாயத்தில் முஸ்லிம்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (வழிமுறையை) பின்பற்றவேண்டுமென கேட்கப்பட்டுள்ளார்கள் என முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்; இப்ராஹிம் நபி அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவர்களுக்கு எட்டு வயது. (சஹீஹ் புஹாரி, முஸ்லிம், அஹ்மட்)

13. இயேசுநாதர் (ஈஸாநபி) அராமிக் மொழி பேசினார்கள். இறைவனை "எலாஹ்" (Elah) என்று அழைத்தார்கள். அது "அல்லாஹ்" என்று அரபியில் உச்சரிப்பதற்கு சமனாகும். அராமிக் பைபிளின் மொழியாகவும், மிகத்தொன்மையானதுமாகும். அம்மொழியில் ஹீப்ரு, அரபு, எதியோப்பியா, பபிலோனியா, ஆகிய பாஷைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகும். எனவே அராமிக் மொழியில் "எலாஹ்" என்பது அரபியில் "அல்லாஹ்" என்பதற்கு சமனான இறைவனை குறிப்பதாகும். ஏனெனில் "எலாஹ்"என்ற சொல், அரபியில் உள்ள "அல்லாஹ்" என்ற வார்த்தையிலிருந்து உதித்ததாகும்.

எனவே இயேசுநாதரை (ஈஸா நபி) உண்மையான முறையில் பின்பற்றுபவர்கள், கீறிஸ்தவர்களா??? முஸ்லிம்களா??? "ஆகவே நான் இப்பொழுது உண்மையான இயேசுநாதரை (ஈஸாநபி) பின்பற்றுவதன்மூலம், இறுதிநபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தை பூரணமாக பின்பற்றுகின்றேன்". இவ்வாறு இமானுவல் அட்பயோர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-