அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



​ஓமன் நாட்டில் வேலை: தமிழக அரசு அறிவிப்பு

ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 21 முதல் 35 வயதிற்குட்பட்டு டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் மேலும் டவர் (Tower) மற்றும் போல் (Pole) தொடர்பில் அனுபவம் உள்ள எலக்ட்ரிகல் டெக்னிசியன்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச இருப்பிடம், மருத்துவம் மற்றும் காப்பீடு முதலியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள், தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய சுயவிபரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-