அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், :   விழுப்புரம் மாவட்டம் கலை கிராமத்தை சேர்ந்தவர் அல்லாபாஷா(38). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் நேற்று மாலை விழுப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியை ஏற்றி கொண்டு பெரம்பலூர் சாலையில் ஈச்சம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே உள்ள வேகத்தடையில் ஆம்புலன்ஸ் திடீரென ஏறியதால் நிலை தடுமாறி, எதிரே சென்ற டாரஸ்லாரி மீது மோதியது. இதில் அல்லாபாஷா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  இதுகுறித்து பெரம்பலூர் வழக்கு பதிந்து டாரஸ் லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு 
வருகின்றனர். பெரம்பலூர் அருகே விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் ஆம்புலன்ஸ் விபத்திற்குள்ளாகி ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)


ஜாதி, மத பேதமின்றி பலரது உயிர்காத்த சகோதரர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாரின் மண்ணறை வாழ்வு இலகுவாகி மறுமையில் வெற்றி பெற ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள்....!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-