அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அன்மையில் சவுதி அரேபியா 47 தீவிரவாத செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனையை தீர்பளித்து அத்தீர்ப்பை நிறைவேற்றியது. இததைத் தொடர்ந்து பல வாத பிரதிவாதங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக சவுதி அரேபியா மீது கரி தூவ துடிங்கும் இதயங்ளுக்கு இந்நிகழ்வு சீனி போட்ட அவல்தான்.

இருப்பினும் எமது விமர்சனம் நடு நிலையுடன் இருக்க வேண்டும். பக்கசார்பான விமர்சனங்கள் எம்மை யார் என அடையாளப்படுத்திவிடும். சவுதி அரேபியா அல்குர்ஆனோ, அஸ்ஸுன்னாவோ அல்ல.

அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் அடிப்படையாகக்கொண்ட நாடு. இருக்கும் முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தை பின்பற்றும், அதற்கான முறையான திட்டமிடல்களை கொண்ட ஒப்பீட்டில் சிறந்த ஒரு நாடு. தவிர அங்கு மார்க்க தவறுகள், மனித தவறுகள் இடம் பெறுவதில்லை என்று கூறவும் முடியாது. தவறுகள் இடம்பெரத்தான் செய்கின்றன அவைகளை முறையாக சுட்டிக்காட்டுவதும், நடுநிலையோடு விமர்சிப்பதுமே ஒரு சிறந்த நடுநிலையாளரின் பண்பு.

யார் இந்த நிம்ர் பாகிர்…???

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்ளில் ஒருவர்தான் نمر باقر النمر “நிம்ர் பாகிர் அந்நிம்ர்” எனும் ஷீஆ மத போதர். சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியத்தில் ”அல்அவாமீயா” எனும் பிரதேசத்தில் 1959ல் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சவுதியில் கற்ற அவர் உயர் கல்வியினை 1980களில் ஈரானில் கற்றார். பின்பு ஷீஆ மத புசாரியாக அங்கேயே சுமார் 10 ஆண்டுகள் பல இடங்களில் தனது விசுவாசத்தை மேற்கொண்டார். பின்பு தனது தாய்நாடான சவுதி திரும்பிய அவர் குமைனியின் புரட்ச்சி வெடித்து குமைனிக்கு சார்பான ஷீஆ மத அரசு அமையப்பெரும் போது ஈரான் சென்று அங்கு தனது விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதன் பிறகு சவுதி வந்த நிம்ர் சவுதி அரசை தாறுமாறாக விமர்சித்தார். விமர்சனம் மட்டுமின்றி தீவிரவாத கருத்துக்களையும், பயங்கரவாத செயற்பாடுகளையும் மிகப் பகிரங்கமாக மேற்கொண்டார். உதாரணமாக சிலவற்றை குறிப்பிடலாம்.

சவுதிவாழ் ஷீஆ மதத்தவர்களை பாதுகாப்போம் எனும் கருத்தில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, சவுதி அரசுக்கு எதிராக பல சதித்திட்டங்களை தீட்டினார்.
அயல் நாடான பஹ்ரைனில் ஷீஆ மத புரச்சிக்கான எத்ததிப்புகளுக்கு முழு ஆதரவு வழங்கினார்.
அவர் வாழ்ந்த, ஷீஆ மதத்தினர் அதினமாக வாழும் அல்கத்தீப் பிராந்தியத்தை சவுதியில் இருந்து பிரித்து, ஈரானுடன் சேர்க்க முயச்சித்தார்.

மார்க்க உபதேச மேடைகளை, மின்பர்களை ஷீஆ மத வழிபாட்டின்பக்கமும், சவுதி அரசை மிக மோசமாக விமர்ச்சிக்கும் களமாக மாற்றினார்.

சவுதி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவும், தீவிரவாத செயற்பாட்டுக்கும் மக்களை பகிரங்கமாக அழைத்தார்.
தீவிரவாத செயற்பாட்டுக்கு அடித்தளமிட்டார்.
நாட்டில் பொது பாதுகாப்பிற்கு அச்சுருத்தலை மேற்கொண்டார்.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் தலையிட்டமை
அரச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக ஒழிந்திருந்து கொரில்லா தாக்குதல்கள் மேற்கொண்டமை
”அல்ஆவாமீயா” பிரதேசத்து காவல் நிலையத்தை தாக்கியமை
இணையதளங்கள், சமூக தளங்களில் நாட்டில் குழப்பங்களையும், தீவிரவாதத்தையும் தூண்டியமை.
பல எச்சரிக்கைகளுக்கு பிரகும் தெடர்த்தேர்ச்சியாக அல்கத்தீப் பிராந்தியத்தை பிரிப்பதற்கான தீவிரவாத செயற்பாட்டைத் தொடர்ந்தமை,
பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க முயன்ற அரச பாதுகாப்பிற்கு இடையுறு செய்தமை.
சவுதியின் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் ஒழித்து ”விலாயதுல் பஹீஹ்” கோட்பாடுடன் ஈரானுடன் கைகோர்த்து ஆட்சி செய்வோம் என கோசம் எழுப்பியமை…

என இவரின் குற்றப்பட்டியல் வகைதொகையின்றி நீள்கிறது. நேற்று முடிவெடுத்து இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது என எம்மில் பலர் எண்ணுவது போலல்ல இத்தண்டனைகள். குறித்த குற்றவாளியான நிம்ர் 2006,2008,2009 காலங்களில் கைதுசெய்யப்பட்டு கட்டம்கட்டமான தண்டனைகள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு இறுதியாக 2012ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு, 2014ம் ஆண்டு 15ம் திகதி ஒக்டோபர் மாதத்தில்தான் குற்றவியல் நீதி மன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பாகியது. இதை எதிர்ந்து நிம்ர் தரப்பினர் மேல்முறையீடு செய்தார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மேல்முறையீடு மீண்டும் விசாரிக்கப்பட்டு குற்றம் நிறுபிக்கப்பட்டு 2016.01.02ல் தான் விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரசு முற்றிளும் சுதந்திரமான முறையிளேயே தனது நீதித் துறையை விட்டிருக்கிறது என்பதை அந்நாட்டில் நீதி துறை விவகாரங்களை, சட்டதிட்டங்களை படிப்பவர்களுக்கு புரியும்.

சவுதி ஆரேபியாவைப் பெருத்தவரை அது ஸலபீய சிந்தனையுடைய நாடு. நாட்டில் சட்டதிட்டங்கள் அல்குர்ஆனிய வழிகாட்டல்களாகவே இருக்கின்ற இந்நிலையில் நாட்டில் கொள்கைக்கும், பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக இருப்பவர்களுக்கு அந்த நாட்டின் சட்டத்தின் படி என்ன தண்டனையோ அதைதான் சவுதி மேற்கொண்டது. பல கட்ட சுதந்திரமான விசாரனைகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இவ்விகாரம் குறித்து அறிவற்ற, காழ்புணர்வின் அடிப்படையில் விமர்சனம் செய்வது ஆரோக்கியமான விடயம் அல்ல. நிம்ரின் பின்னனியில் ஷீஆ மதத்தின் தாயகம் ஈரான் இருப்பது தெறிந்தும் இவருக்கு ஆதரவு கோஷம் எழுப்புபவர்கள் மறைமுகமாக ஷீஆ மதத்தை ஆதரப்பதாகவே கருத வேண்டியுள்ளது. காரணம் இந்த நிம்ர் என்ற ஷீஆ மத போதகன் உத்தம ஸஹாபா பெருமக்களை மிகக் கடுமையான ஏசி, தூசும் வீடியோக்கள் இன்றும் இணையத்தில் காணலாம்,.

Thanks : 
-அபு மாஸின் உமர் (மதனி) &  Madavala news.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-