அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புகழேந்தி காத்திருந்தான்...
புகழையேந்திக் காத்திருந்தான்...

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நந்தக்குமார் பொறுப்பேற்க, அவரிடம் தரேஸ் அஹமது தனது பணிகளை ஒப்ப டைத்தார். விடைபெறும் ஒருவரை வழியனுப்பவும், வந்திருப்பவரை வரவேற்கவும், அரசுத்துறை அலுவ லர்கள் அணிவகுத்துக் காத்திருந்த னர்...


அவர்களுக்கிடையே, அம்மாவை அரவணைத்தபடி, ஒன்பது வயதுச் சிறுவன்ஒருவன், எவரையோ ஏக்கத்தோடு எதிர்பார்த்துக், கால் களை உதறியபடிக் காத்திருந்தான். எள்ளுதான் எண்ணைக்குக் காய் கிறது, எலிப் புழுக்கை எதற்காகக் காய்கிறது, மன்டேதானே மனுக்க ளைத் தரவேண்டும் எனக்கூட சிலர் முனு முனுத்தனர். விசாரித்த போதுதான் விபரம் தெரிந்தது...

பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதுதான் கள்ளப்பட்டிகிராமம். இங்கு கூலித்தொழிலாளியின் மகனாகப் பிறந்த சிறுவன் புகழேந்தி(9). பிறக்கும் போதே உடல் பாதிப்புக ளோடு ஒட்டிப் பிறந்தவனுக்கு, காதும் சரியாகக் கேட்காததால் கடவுளுக்குக் கருணையே இல்லை யாவென குடும்பத்தார் குமுறித் தீர்த்தனர்...

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுமென வள்ளுவன் சொல்லிவிட்டான், செவியே இல்லாதபோது...?
வறுமையில் பிறந்துவிட்டானென வருத்தப்பட்டாலும், வயிற்றுக்கு ஈய, மீண்டுமொரு வள்ளளாரும் வந்துதிக்கலாம்...செவியே சரியில் லாமல் பிறந்துவிட்டானே என்ன செய்வது...

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மகனுடன் கலெக்டரை சந்தித்தத் தாய் மகேஸ்வரி, கண்ணீருடன் விடுத்தக் கோரிக்கை காணமுடி யாத கடவுளின் காதுகளை எட்டியதோ என்னவோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இறுதிமூச்சு வரை உழைத்தாலும், சத்தியமாக சம்பாதிக்க முடியாத இரண்டேகால் லட்சத்திலான இயந்திரம் புகழேந்திக்கு வழங்கபட்டது...

நன்றி மறப்பது நன்றன்று என்ப தைக்காட்டிலும், செய்நன்றி கொன் றார்க்கு உய்வில்லை என்றுணர்ந்த மகேஸ்வரிதான், மாற்றலாகிச் செல் கிறாரே, அந்த மாமனிதனுக்கு, மறக் காமல் நன்றிசொல்ல வேண்டுயென மகனுடன் காத்திருந்தார்...

இயற்கையாகவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கும் தரேஸ்அஹமது, பலருக்கு செயற்கையாகவும் காதுகளைக் கொடுத்தது பாராட்டுக்குறியது மட்டுமல்ல... பதிவுசெய்யப்பட வேண்டியது...!


நன்றி -ஜே.வில்சன்,பெரம்பலூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-