அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  

புதுடெல்லி,

இந்தியாவின் வளர்ச்சியில் அதிகளவில் பங்கேற்குமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள சாதனைகளை இந்தியாவிற்கு உரித்தாக்குகின்றனர். இது இந்தியாவிற்கு பெருமையாக உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதுகாப்பது அரசின் கடமை என தெரிவித்தார்.

அதேநேரத்தில், மத்திய அரசு இதுவரை 92 கோடி இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ள நிலையில், விரைவில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். எனினும், இதுகுறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-