அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரை அடுத்த வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரை சேர்ந்தவர் செல்வி. இவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திராவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:- குன்னம் தாலுகா பெருமத்தூர் கிளியூரைசேர்ந்த சிலர் தீபாவளி பண்டிகைக்காக வி.களத்தூர் பகுதியில் பொதுமக்களிடம் மாதச்சீட்டு நடத்தினர். ஒரு நபருக்கு மாதம் ரூ.200 வீதம் ரூ.2,400 என, சுமார் 75 பேரிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். இந்நிலையில் சீட்டு முடிந்து பணத்தை திருப்பி கேட்டபோது அதில் ரூ.50ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 30ஆயிரத்தை சீட்டு கட்டியவர்களுக்கு பிரித்து கொடுக்கவில்லை.

தீபாவளி பண்டிகை முடிந்து, பொங்கல் விழாவும் வந்து சென்றுவிட்டது. இதுதொடர்பாக சீட்டு நடத்தியவர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் கட்டிய பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-