அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நான் வேலை பார்த்து வரும் கம்பெனியில் வருகைப் பதிவேடாக கைரேகையை பயன்படுத்துகிறோம். அந்த கருவியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். ஆயிரம் பேர் வந்தாலும் துல்லியமாக பதிவேற்றப்பட்டிருக்கும் நபர்களின் முகத்தை வைக்கப்படும் கைரேகையை வைத்து காட்டி விடுகிறது இந்த கருவி. இதனைப் பார்த்து பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.

முன்பு இறந்தவர்கள் தற்போது பூமியில் வாழ்பவர்கள் மேலும் இனி பூமியில் பிறக்கப் போகிறவர்கள் என்று கிட்டத் தட்ட 1000 கோடி மக்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்தனை விரல் நுனிகளும் ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. ஒரு இஞ்ச் அளவே உள்ள இந்த விரலின் நுனியில் அனைவரின் விபரங்களையும் இறைவன் ஜிப் செய்து வைத்துள்ளான். பத்திரப் பதிவு, காவல் துறை, பாஸ் போர்ட், விசா என்று எதை எடுத்தாலும் இந்த விரல் நுனியின் பணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது நம்மால்.

மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!

'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'

75 : 3, 4 - குர்ஆன்

அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், அந்த மனிதனின் விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். தற்போது டி என் ஏ டெஸ்ட், கண் டெஸ்ட் மூலமாகவும் மனிதர்களை இனம் பிரிக்கிறார்கள். ஆனால் உலகம் முழக்க பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது விரல் ரேகைகளையே. இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் மறுமை நாளில் திரும்ப கொண்டு வந்து விடுவோம். அங்கு எவரும் தப்பிக்க முடியாது. நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் அந்த மக்களுக்கு விளக்குகிறான்.

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு எடுத்துக் காட்டு.

 சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-