அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
அமெரிக்காவிலுள்ள கிளிப்டன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறந்த ஆடை தேர்வில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய ஹிஜாப் அணிந்த ஆடையே சிறந்த கண்ணியம் நிறைந்த ஆடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே நாங்கள் தான் நாகரீகத்தின் உச்சிக்கு சென்று விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் பெண்கள் அரை நிர்வாணத்தோடும், முக்கால் நிர்வாணத்தோடும் தான் பவனி வருவார்கள். அது தான் ஃபேஷன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.

இஸ்லாமிய பெண்கள் அணியும் பாதுகாப்பு கவசமான ஹிஜாப், பெண்களை அடிமைப்படுத்தும் ஆடை என்று அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் எல்லாம் கொக்கரித்தன. இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்ற ஸ்லோகத்திற்கு ஏற்றாற்போல் அமெரிக்க பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனித அறிவிற்கு இன்று தான் ஹிஜாப் சிறந்த ஆடையாக தோன்றியுள்ளது, இதை தான் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிவிட்டது. சிறந்த ஆடை தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் அஃப்ரார் ஸஹின், பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

A hijab-wearing Muslim girl of Palestinian origin has been voted the best dressed student at Clifton High School in New Jersey.

Abrar Shahin’s yearbook photo shows her in a black skirt and skinny jeans, with ankle-high boots and a white blazer.

Along with this, she is seen wearing a hijab or headscarf.

“There are always cheerleaders who win and popular girls, so I was very surprised it was me, being a hijabi,” Shahin said.

“It was a dream come true,” she added.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-