அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...காரணம் கேட்கவும் ஆளில்லை

காரணம் கூறவும் வார்த்தையில்லை


வசனங்களால் சொல்ல இது கதையுமில்லை

வார்த்தைகளால் சொல்ல இது கவிதையுமில்லை

மௌனத்தால் மட்டுமே சொல்ல முடியும்

மனதால் மட்டுமே அறிய முடியும்

உயிரால் மட்டுமே உணரமுடியும்

உணர்வை எப்படி சொல் முடியும்

ஆட்சியராய் வந்தீர் எம் மாவட்டத்திற்க்கு

ஆட்சி செய்தீர் எம்மவர் அத்துனை பேரின் மனங்களை அல்லவா ?

எத்துனையே கதாநாயகர்களுக்கு கைகொட்டினோம் திரையில் . ..

நடித்தவரேயே ஆராதித்தோம் யாம்

கண்ணெதிரே கண்ட முதல் நாயகன் நீங்கள் ... நீங்கள் மட்டுமே ...

.ஜனநாயகம் மீது இருக்கும் நம்பிக்கை துக்கியெறியப்பட்டத இன்று

தேர்தல் வருகிறது அறிவிப்புகள் வரப் போகிறது .... பொற்கால ஆட்சியென்று ?
நிகழ்காலத்தை நற்காலத்தை கல்லறைக்கு அனுப்பி விட்டு , எங்கிருந்து வரும் பொற்காலம் ....

நாற்காலி போருக்கு உங்கள் நாற்காலி நகர்த்தபட்டதா ?
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா ?

இப்படி ஒர் தண்டனைக்குப் பின் தேர்தல் என்றால் ...

இன்னும் 100 வருடங்கள் தேர்தல் தேவையில்லை யென அனைத்து கட்சி தீர்மானம் போடவும் நாங்கள் தயார் ....

இது இலையுதிர் காலமெனே வே நம்புவோமாக ....

எங்களை விட்டு போகாதே எங்கள் நாயகனே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-