அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபியப் பங்குச் சந்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.Image copyrightGettyImage caption
அரபு உலகில் பல நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது

அரபு உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையான சவுதி அரேபியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் ,குவைத் மற்றும் துபாய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டன.

இதனிடையே இரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பாரல்கள் அதிகரிக்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.Image copyrightAPImage captionஇரானின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கவுள்ளது

அப்படி இரான் தனது நாளாந்த எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்குமானால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைய வழி வகுக்கும்.

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் இப்போது 29 டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளாக இரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி மீதிருந்த தடை காரணமாக இரானுக்கு இதுவரை 160 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-