அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கோபி: ‘‘பெற்றோர் உறுதுணையாக இருந்தால் தான் திருநங்கைகள் சாதிக்க முடியும்’’ என்று இந்தியாவில் முதன்முறையாக போலீஸ் எஸ்.ஐ. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகா யாஷினி தெரிவித்தார். இந்திய அளவில் எஸ்ஐ., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் திருநங்கையான பிரித்திகா யாஷினிக்கு கோபியில் தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். த.பெ.திக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநங்கை பிரித்திகாயாஷினி பேசியதாவது: சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் மட்டும் கிடைத்தால் போதும். திருநங்கைகளை கடவுளாக பார்க்கவேண்டாம், திருநங்கைகளுக்கு பொதுமக்களின் கருணையோ, உதவியோ தேவைப்படவில்லை. ஒவ்வொரு திருநங்கையிடமும் தனிப்பட்ட திறமை உள்ளது. அவர்களுக்கு உதவினால் அவர்களும் அனைத்து துறையிலும் முன்னேறுவார்கள்.

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கினால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். அதற்கு முதலில் திருநங்கைகளின் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால் மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். தற்போது பட்டபடிப்பு முடித்துள்ள பல திருநங்கைகள் அரசு வேலைவாய்ப்புக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டி வருகிறேன்.
இவ்வாறு பிரித்திகா யாஷினி பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-